ஆயுதக் கடத்தல்: போலீஸ் காவலில் புலிகள்
சென்னை:கோடியக்கரை அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட 2 விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 5 பேரையும் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்கபோலீஸாருக்கு சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே சென்று கொண்டிருந்த படகு ஒன்றை கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.இலங்கை அருகே உள்ள ராணித் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் படகில், பயங்கர ஆயுதங்கள், மனித வெடிகுண்டு ஜாக்கெட்உள்ளிட்டவை இருந்தன.
இவற்றைக் கடத்திச் சென்ற 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீஸார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஜார்ஜ்டவுன் குற்றவியல்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 5 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அதில்கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், 5 பேரையும் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்த 5 பேரும் நேற்று கியூ பிரிவுபோலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
2 விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 5 பேரிடமும் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
யார் கண்ணன்?இதற்கிடையே தமிழகத்திலிருந்து ஆயுதங்களைக் கடத்தும் செயலில் கண்ணன் என்ற முக்கியப் புள்ளிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்த்ை சேர்ந்தவர் என்றும் இவரோடு பாலன் என்ற இன்னொருவரும் சேர்ந்துதான், தமிழகத்திலிருந்துஇலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சென்னையில் தங்கியுள்ளாராம் கண்ணன். அவ்வப்போது இலங்கைக்கு அவர் சென்று வருவது வழக்கமாம். சிறு சிறுகுழுக்களை ஏற்படுத்தி அவர்கள் மூலம் ஆயுதங்களை கடத்திச் சென்று இலங்கைக்கு அனுப்பி வருகிறாராம் கண்ணன்.
ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை ராமேஸ்வரம், தூத்துக்குடி, பாம்பன், மண்டபம்,வேதாலை உள்ளிட்ட பகுதிளுக்குக் கொண்டு போய் அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குக் கொண்டு சென்று வருவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு வளையத்திற்குள் சிக்கி விடக் கூடாது என்பதற்காக தமிழக மீனவர்களைப் பயன்படுத்தி அவர்கள் மூலமாகவே இந்த கடத்தல் நடந்துவருவதாகவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications