பொய் சொன்ன இந்தியருக்கு அபராதம்
சிங்கப்பூர்:அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்ததாக பொய் சொன்ன ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ.பட்டதாரிக்கு சிங்கப்பூரில் 6000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாராயணன். 1989ம் ஆண்டு இவர் ஹைதராபாத் உஸ்மானியாபல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். அதன் பின்னர் சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்தார்.
வேலைக்காக அவர் விண்ணப்பித்தபோது அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்ததாககூறியிருந்தார். அதன் பின்னர் வேலைக்கு சேர்ந்தார். தற்போது தாவ்கா என்ற வர்த்தக நிறுவனத்தில் நிர்வாகஇயக்குநராக உள்ளார்.
மகேஷ் வேலைக்கு சேர்ந்தபோது கொடுத்த விண்ணப்பத்தில் கூறப்பட்டிருந்த தகவல்களை அந்நாட்டு தொழிலாளர்நலத்துறை அதிகாரிகள் சரி பார்த்தபோது அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்ததாக மகேஷ் கூறியிருந்தது பொய்எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் மகேஷுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும் நிலை இருந்தது.
இந்த நிலையில் மகேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிலிப் ஜெயரத்னம் வாதிடுகையில், தனது படிப்புச்சான்றிதழ்களோடு தவறான ஆவணங்களை மகேஷ் சமர்ப்பிக்கவில்லை.
மேலும், தொழிலாளர் நலத்துறை மகேஷின் கல்விச் சான்றிதழ்களைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தவும் இல்லை.
மிக்ச சிறந்த திறமைசாலி மகேஷ். சிங்கப்பூரில் தனது நிர்வாகத் திறமையை நிரூபித்து பெயர் பெற்றவர். சிங்கப்பூரின்தாங் வம்சத்தைச் சேர்ந்த 32 மில்லியன் டாலர் மதிப்புள்ள கலைப் பொருட்களை விற்க துணை புரிந்து, சிங்கப்பூர்பொருளாதாரத்திற்கும் அவர்பங்காற்றியுள்ளார்.
அவரது சாதனையைப் பார்த்து விட்டு கோர்ட் எதையும் தீர்மானிக்க வேண்டும் என்று வாதாடினார். அவரது வாதத்தைக்கேட்ட சிங்கப்பூர் நீதிமன்றம், மகேஷுக்கு 3000 டாலர் அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் பொய்யான தகவலைக் கூறியதற்காக 68 பேருக்கு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications