டிஸ்மிஸ் ஆகிறது முலாயம் சிங் அரசு?
லக்னோ:உத்தரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு குறித்து அம்மாநில ஆளுநர் டி.வி.ராஜேஷ்வர், மத்திய உள்துறைக்கு அறிக்கைகொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து உ.பி. அரசு இன்று மாலைக்குள் டிஸ்மிஸ் ஆகும் என்று தெரிகிறது. ஆனால் மத்தியஅரசின் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உ.பி. மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த13 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து முலாயம் சிங் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது அரசு பெரும்பான்மை பலத்துடன்தான்உள்ளதாக முலாயம் கூறி வருகிறார்.
ஆனால் உ.பி. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக்கோரி வருகின்றன. இந்த நிலையில் உ.பி. ஆளுநர் ராஜேஷ்வர் நேற்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலை சந்தித்து உ.பி. நிலவரம் குறித்துப் பேசினார்.
இந்த நிலையில் இன்று காலை அவர் மத்திய உள்துறை அமைச்சருக்கு உ.பி. மாநில அரசியல் நிலவரம் மற்றும் சட்டம்ஒழுங்கு குறித்த 2 பக்க அறிக்கையை ராஜேஷ்வர் அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கருத்துக்கள், சட்டம் ஒழுங்கு, அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை இணைத்து இந்தஅறிக்கையை ராஜேஷ்வர் அனுப்பியுள்ளாராம்.
மேலும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க நடக்கும் முயற்சிகள் குறித்தும் ராஜேஷ்வர் தனது அறிக்கையில்தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ஆளுநரின் அறிக்கையைத் தொடர்ந்து உ.பி. அரசு டிஸ்மிஸ் ஆகக் கூடிய சூழ்நிலை பிரகாசமாகியுள்ளது. இன்று மாலைக்குள்முலாயம் சிங் அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என பேச்சு நிலவுகிறது.
ஆனால் இதுகுறித்து தான் கவலைப்படவில்லை என்று முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அதை மீண்டும் நிரூபிக்க நான் தயார்.
நான் பதவியிலிருந்து விலக மாட்டேன். என்னை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு விரும்பினால் தாராளமாக செய்துகொள்ளட்டும் என்றார் முலாயம் சிங்.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உ.பியில், 1968ம் ஆண்டு முதன் முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 8 முறை மாநில ஆட்சிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக 2002ம் ஆண்டு இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் எதிர்ப்பு:
இதற்கிடையே, உ.பியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புதெரிவித்தள்ளது.
அரசுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறதோ, இல்லையோ, அதை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆட்சியை டிஸ்மிஸ் செய்வது சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications