காவிரியின் பெயரால் அரசுப் பணம் ஸ்வாஹா:அதிமுக எம்.பி. மீது பரபரப்பு புகார்!
சென்னை:காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் ஆஜராவதாகக் கூறி, தமிழக அரசுப் பணத்தை பெருமளவு ஸ்வாஹா செய்து விட்ட அதிமுக ராஜ்யசபாஎம்.பியும், வழக்கறிஞருமான என்.ஜோதி மீது நடவடிக்கை எடுத்து, எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்தவழக்கறிஞர் அமர்நாத் ராவ் காண்டே என்பவர் சிபிசிஐடிபோலீஸிடமும், தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாத் ராவ் காண்டே இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்து ஒரு புகாரைக்கொடுத்தார்.
சிபிசிஐடி அலுவலகத்தில் அவர் அதிமுக ராஜ்யசபா எம்.பி. என்.ஜோதி மீது புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு நான் ஒரு புகாரைஅனுப்பியுள்ளேன். அதில் ஆதாயம் தரும் பதவி சட்டத்தின் கீழ் ஜோதியின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். இதைவலியுறுத்தி நானும், 40 பேரும் கையெழுத்திட்டு அந்தப் புகாரைகொடுத்துள்ளோம்.
இக்கடிதத்தை தற்போது குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளார். அரசியல் சட்டப் பிரிவு 103வது பிரிவின் கீழ்எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் குடியரசுத் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி மத்திய தேர்தல் ஆணையர் விசாரணை நடத்தி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு 2006, ஆகஸ்ட் 18ம் தேதி விளக்கம் கேட்டுகடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு தலைமைச் செயலாளர் 2006, அக்டோபர் 20ம் தேதி பதில் அனுப்பியுள்ளார்.
அதில், கடந்த ஆட்சியின்போது பொதுப்பணித்துறை விமானத்தில், ஜே வகுப்பு டிக்கெட் வாங்கி சென்னையிலிருந்து டெல்லிக்கு 9 முறைசென்றுள்ளார் ஜோதி. இதற்கான கட்டணம் ரூ. 2 லட்சத்த 32 ஆயிரத்து 240 ஆகும்.
காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக ஜோதி இந்த விமான பயணத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தசமயத்தில் காவிரி தொடர்பான எந்த வழக்கு விசாரணையும் நடைபெறவில்லை, ஜோதியும் அரசு சார்பில் காவிரிப் பிரச்சினை தொடர்பாகஆஜராக நியமிக்கப்படவில்லை.
இதுதவிர டெல்லியில் எம்.பி. என்ற முறையில் அவருக்கு அரசு சார்பில் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசின் தமிழ்நாடுஇல்லத்திலும் 209வது எண் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின்பெயரில் இந்த அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
27.8.2003 முதல் 11.5.2006 வரை ஜெயலலிதாவின் பெயரில் இந்த அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கான வாடகை மட்டும் ரூ. 7லட்சத்து 95ஆயிரத்து 264 ஆகும். இதில் சாப்பாடு, தொலைபேசி, போக்குவரத்து செலவுகளும் அடங்கும். ஆனால் இந்த அறையை ஜெயலலிதாவின் பெயரில்தவறாகப் பயன்படுத்தியுள்ளார் ஜோதி.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவர் ஜோதி. இந்த நிலையில் காவிரி வழக்கு என்ற பெயரில்தமிழக அரசு சார்பில் ஆஜரானதாக பொய் சொல்லி விட்டு அவர் டெல்லிக்கு 9 முறை சென்றுள்ளார்.
உண்மையில் அவர் காவிரி நடுவர் மன்றத்தில் எந்த வழக்கிலும் ஆஜராகவில்லை. பொதுப்பணித்துறை சார்பில், தமிழக அரசுப் பணத்தில் அவர்டெல்லி சென்றுள்ளார். அத்தோடு, டெல்லியில் அவர் இல்லாத நேரத்திலும் கூட தமிழ்நாடு இல்லம் உள்பட பல்வேறு சலுகைகளை அவர்பயன்படுத்தியுள்ளார்.
தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார் ஜோதி. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அரசு நிதியைத் தவறாகப்பயன்படுத்தியுள்ளார். எனவே அரசு நிதியை ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல், தவறாக நிதியைபயன்படுத்துவது ஆகிய குற்றங்களை அவர் இழைத்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பான ஆவணங்களின் நகல்களை இத்துடன் இணைத்துள்ளேன். எனவே ஜோதி மீது விசாரணை நடத்தி வழக்குப் பதிவுசெய்ய வேண்டும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அமர்நாத் ராவ் காண்டே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications