காவல் நிலையத்தில் வழக்கு தோஷ பூஜை
ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் அதிக அளவில் வழக்குகள் சேர்ந்ததால் தோஷம் நீக்க சிறப்பு யாகம் நடத்தி பூஜை நடத்தப்பட்டது.
ஓமலூர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டம் 153 வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அதிலும் குற்றவியல் வழக்குகள்தான்அதிகமாம். இதனால் காவல் நிலையத்தில் தோஷம் இருக்க வேண்டும். அதனால்தான் இந்த அளவுக்கு குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டதாகபோலீஸ் தரப்பில் பீதி ஏற்பட்டது.
இதையடுத்து ஓமலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்கள் குறையவும், காவல் நிலையத்துக்கு ஏற்பட்ட தோஷம்நீங்கவும் சிறப்பு யாகம் நடத்தி பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது.
நேற்று இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் யாக பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குருக்கள் ஒருவரை வரவழைத்து அவரதுதலைமையில் நள்ளிரவில் யாக பூஜை நடத்தப்பட்டது. இதில் அனைத்து போலீஸாரும் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
அதன் பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரை எடுத்து காவல் நிலையத்தின் அனைத்து அறைகளிலும் குருக்கள் தெளித்தார். இந்தகாவல் நிலைய வழக்கு தோஷ யாகத்தால் ஓமலூரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த யாக பூஜை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதா, அவர்கள் அனுமதியுடன்தான் நடந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications