உ.பி: ஆட்சிக் கலைப்புக்கு கருணாநிதி ஆதரவு?
சென்னை:உத்தரப் பிரதேச விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவையும் திமுக ஆதரிக்கும் என முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
உ.பி.யில், முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசைக் கலைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக ஆளுநர் ராஜேஷ்வர், மாநில சட்டம் ஒழுங்கு, முலாயம் அரசின் பெரும்பான்மை பலம்உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முடிவை இடது சாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. எனவே ஆட்சிக் கலைப்புஅஸ்திரத்தை உடனடியாக ஏவாமல் அமைதி காத்து வருகிறது காங்கிரஸ். இருப்பினும் உ.பி. அரசு டிஸ்மிஸ்ஆவது உறுதி என்று கூறப்படுகிறது.
மறுபக்கம் முலாயம் சிங் யாதவ் காங்கிரஸ் மிரட்டலைக் கண்டு அஞ்சுவது போலத் தெரியவில்லை. முடிந்தால்கலைத்துப் பார் என்று அவர் சவால் விட்டுள்ளார்.
இந்த நிலையில், உ.பி. விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவையும் திமுக ஆதரிக்கும்,ஏற்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைக்கக் கூடாது என்பதை ஒரு கொள்கையாகவேகொண்டுள்ள கட்சி திமுக. ஜெயலலிதா அரசையேக் கலைக்க வேண்டாம் என்று நினைத்த கட்சி திமுக.
இந்த நிலையில் உ.பி. விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் என்ன முடிவு எடுத்தாலும் அதை திமுக ஏற்கும் என்றுகருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், உ.பி. விவகாரம்தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசினேன்.
உ.பி. தொடர்பாக காங்கிரஸ் எந்த முடிவை எடுத்தாலும் அதை நான் ஆதரிப்பேன். காங்கிரஸ் சரியான முடிவைஎடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் கருணாநிதி.
முன்னதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைப்பது என்பதை திமுக ஏற்காது. அதை கடுமையாக ஆட்சேபிக்கும்.முலாயம் சிங் அரசு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சட்டசபையில் வாய்ப்பளிக்க வேண்டும். அதற்குமுன்பாக டிஸ்மிஸ் செய்வதை திமுக ஏற்காது என்று கூறியிருந்தார்.
ஆனால் இளங்கோவனின் அறிக்கை வெளியான பின்னர் திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டஇன்னொரு அறிக்கையில், இளங்கோவன் கூறியுள்ள கருத்துக்கள் திமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து அல்லஎன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆட்சிக் கலைப்பு தொடர்பான விவகாரத்தில் திமுகவின் இந்த முரண்பட்ட நிலை அரசியல் வட்டாரத்தில்பெரும் வியப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications