கேரளத்துக்கு எதிராக நாளை கோவையில் பந்த்!
கோவை:சேலம் கோட்டம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளாவைக் கண்டித்து கோவை மாநகரில் நாளைமுழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது. இதனால் நாளை பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளை இணைத்து சேலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு எதிராக கேரள ரயில்வே அதிகாரிகளும், அம்மாநில அரசும் கடுமையாக போராடி வருகின்றன. சென்னையில் உள்ள தெற்குரயில்வே தலைமையகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மலையாள அதிகாரிதான் இந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மறைமுகத்தலைமை தாங்குவதாகவும் கூறப்படுகிறது.
சேலம் கோட்டம் அமைக்கக் கூடாது என்று கோரி கேரள முதல்வர் அச்சுதானந்தன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். பின்னர் கேரள எம்.பிக்கள்கிளம்பிப் போய் லாலு பிரசாத்தைப் பார்த்து மனு கொடுத்தனர். மலையாளிகளின் இந்த சுய நலத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புகூடி வருகிறது.
இந் நிலையில், கேரளாவைக் கண்டித்தும், கோவை, திருப்பூர், போத்தனூர் ஆகிய பகுதிகளை திட்டமிட்டபடிசேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை நகரில் நாளை ஒரு நாள் முழுஅடைப்புப் போராட்டம் நடக்கிறது.
இதுதொடர்பாக கோவையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதனால் நாளை பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தகநிறுவனங்கள் மூடப்படும். வெளியூர் பஸ்கள் கோவைக்கு வெளியிலேயே நிறுத்தப்படும்.
பாலக்காடு பறிபோகாமல் காப்போம்: கேரளா
இந் நிலையில் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் தற்போது உள்ள எந்தப் பகுதியும் பறிபோகாமல் காக்க அனைத்து வகையிலும் உதவுவேன் என்று கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுஇணை அமைச்சர் இ. அகமது கூறியுள்ளார்.
பாலக்காடு நகராட்சியின் குப்பை சுத்திகரிப்புப் பிரிவை தொடங்கி வைத்து அகமது பேசுகையில், பாலக்காடு ரயில்வே கோட்டம் இப்போதுள்ள நிலையில் அப்படியே தொடர வேண்டும் என்பதுதான் எனதுவிருப்பமும் கூட.
கேரள மக்களின் கருத்தும் இதுதான். பாலக்காடு கோட்டம் பறிபோகாமல் காக்க எப்படியெல்லாம் உதவ முடியுமோ அப்படியெல்லாம் உதவுவேன் என்றார் அமகது.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ஓ.ராஜகோபாலும் பாலக்காடு கோட்டத்தைக் காக்க பாஜக போராடத் தயாராக இருப்பதாக கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications