முல்லை-கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறுகேரளத்துக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய அணைகள்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து நீதிமன்ற யோசனைப்படி அம் மாநில முதல்வர்அச்சுதானந்தனுடன் தமிழக முதல்வர் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமைச்சர்கள்மட்டத்திலும் பேச்சு நடத்தப்பட்டது. ஆனால், ஒரு பயனும் ஏற்படவில்லை.
மேலும் அணையின் சுவரை கேரள விஷமிகள் சேதப்படுத்தினர். அணையின் பாதுகாப்பு கேரளத்திடம்இருக்கும் நிலையில் இச் சம்பவம் நடந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறுஅணையின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அணை உயரத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ள விடாமல் தமிழகத்தை கேரளம்தடுக்கிறது. எனவே இந்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கேரளத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும்கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழகம்கோரியிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசுரன் ஆஜராகி வாதாடினார்.கேரளத்தின் சார்பில் ஹரிஷ் சால்வேயும், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் வான்மதி ஆஜராகினர்.
அப்போது இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மனுவுக்கு பதில் அனுப்புமாறு கேரளத்துக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள்விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்குஅனுப்புவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என அறிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications