கள்ளக் காதலனை கட்டிலோடு எரித்த பெண்!

Subscribe to Oneindia Tamil

கோவை:வேறு பெண்ணை மணக்கவிருந்த கள்ளக் காதலனை கட்டிலோடு கட்டி வைத்து தீ வைத்து எ>த்துக் கொன்றார் 3 குழந்தைகளின் தாய்.அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

கோவை சுங்கம், சிவராம் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 27). கார் டிரைவரான இவருக்கும் பக்கத்து தெருவில் வசித்து வரும்கிருஷ்ணவேணி (வயது 40) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

கிருஷ்ணவேணி கணவரைப் பிரிந்து வசித்து வருகிறார். இவருக்கு முருகராஜ் (21), கவுரி (17), செளந்தரராஜன் (19) என மூன்று குழந்தைகள்.இதில் முருகராஜுக்கும், கவுரிக்கும் கல்யாணமாகி விட்டது.

பிள்ளைகளுக்குத் தெரியாமல் சரவணனுடன் சந்தோஷமாக இருந்து வந்தார் கிருஷ்ணவேணி. இந் நிலையில் சரவணன், வேறு பெண்ணைக்கல்யாணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். அவருக்கும் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடப்பதாகஇருந்தது.

இதை அறிந்த கிருஷ்ணவேணி கோபமடைந்தார். கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சரவணனை வற்புறுத்தினார். ஆனால் அவர்கேட்கவில்லை.

இதையடுத்து இரவு சரவணனை வீட்டுக்கு வரவழைத்தார். மது அருந்தி விட்டு இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர். பின்னர் இன்றுஅதிகாலை எழுந்த கிருஷ்ணவேனி, தூங்கிக் கொண்டிருந்த சரவணனை கட்டிலோடு சேர்த்து வைத்து கட்டினார்.

பின்னர் அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து விட்டு வெளியே வந்து விட்டார். உடலில் தீ பரவியதால் அலறித் துடித்தார் சரவணன்.ஆனால் கட்டப்பட்டிருந்ததால் அவரால் தப்பிக்க முடியவில்லை.

அவரது ஓலத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தோர் அங்கு ஓடி வந்து சரவணனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து தலைமறைவான கிருஷ்ணவேணியை போலீஸார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+