ஆடம்பரம் வேண்டாம்!-தொண்டர்களுக்கு ஜெ!!
சென்னை:முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே கிடையாது. ஒவ்வொரு நாளும் செய்யும் பணியை மேலும் சிறப்பாக செய்யக் கற்றுக் கொண்டால் நம்முடையவளர்ச்சியை, வெற்றியை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன் பிறப்புகளே. உலகில்வாழும் அத்தனை பேரையும் கட்டிப் போடுவது ஈடு இல்லாத அன்பு தான். தங்களிடம் உள்ள ஈடற்ற அன்பை, பாசத்தை, பற்றை மற்றவர்களிடம்வெளிப்படுத்துவதன் மூலம் நம்முடைய இதயம் விரிவடைகிறது. அதன் மூலமே நற்பண்புகள் அழகாகப் பிரகாசிக்கின்றன.
அந்த வகையில் என்னுடைய பிறந்த நாளன்று என் மீது உள்ள அன்பின் மிகுதியால் எனக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று கழகஉடன்பிறப்புகளாகிய நீங்கள் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். என்னுடைய பிறந்த நாள் நிகழச்சிகளாக, கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள்எவ்வித ஆடம்பரமும் இன்றி, எந்த வீண் செலவுகளையும் செய்யாமல், அவரவர் சக்திக்கு உட்பட்ட வகையில் ஏழைக்களுக்கு அன்னதானம்வழங்கினால், அவர்களுக்கு தேவைப்படுகின்ற உதவிகளைச் செய்தால், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை நம்முடைய வாழக்கையின் குறிக்கோள் ஆக்கிக் கொண்டால், ஏழை எளியோர் என்கிற சமூகம்காப்பாற்றப்படும். பின்னர் நாளடைவில் ஏழை, எளியோர் என்கிற சமுதாயமே இல்லாத அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.
அதற்கான அஸ்திவாரத்தைத் தந்தவர்கள் நம்முடைய இயக்கத் தொண்டர்கள் தான் என்பதை நாடே அறிந்து, கழகத் தொண்டர்களின் வரலாற்றுப்பணிகளை எண்ணி பெருமை பொங்க தலைமுறை தலைமுறையாக அப்பணி போற்றப்படும்.
மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரகளில் தொடங்கி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குக்கிராமம் வரை அனைத்து இடங்களிலும்அதிமுக கொடிக் கம்பங்களுக்கு புதுவண்ணம் பூசி புதுப்பிக்கப்பட வேண்டும். அவை இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்கள் வைக்கவேண்டும்.
என்னுடைய பிறந்த நாளன்று அதிமுக வெற்றிப் பதாகை கொடிக் கம்பங்களில் பட்டொளி வீசி கம்பீரமாக எட்டுத்திக்கும் பறக்க விடப்படவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதன் மூலம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்ட கனவையும், லட்சியத்தையும், நம்முடையநம்பிக்கையையும், கண்ணியத்தையும், தனித் தன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக நம் உயிருக்கு நிகரான அக்கொடி, புரட்சித் தலைவர் தந்தஅண்ணா கொடி நம்முடைய வெற்றியை பறைசாற்றிக் கொண்டே பறந்து கொண்டு இருக்கும்.
அத்தோடு அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும், அனைத்து நகரங்களிலும், அனைத்து பேரூராட்சிகளிலும் அதிமுக அலுவலகங்கள்ஏற்படுத்தப்பட்டு அவை சொந்தக் கட்டிடத்தில் திறக்கப்பட வேண்டும்.
அதற்கான முயற்சிகள் எனது 59வது பிறந்த நாளன்று தொடங்கப்பட்டு, அடுத்த 2008ம் ஆண்டில் என்னுடைய 60ம் பிறந்த நாள் வருவதற்குள்அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் கழக அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றதேனினும் இனிப்பான செய்தி என் காதுகளில் வந்து சேர வேண்டும்.
கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஆற்றுகின்ற இது போன்ற பணிகள் தான் கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனக்கு மனதளவில்திருப்தியும், பெருமகிழச்சியும் அளிக்கக் கூடியவையாகும். அதுவே நீங்கள் எனக்கு வழங்குகின்ற முழுமையான மன நிறைவை அளிக்க கூடியபிறந்த நாள் பரிசாகும்.
கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் மக்கள் தொண்டே நமக்கு தலையாய பணியாகும். ஆகவே அத்தொண்டையும், கழகப்பணியையும் நீங்கள் சலியாது ஆற்றுவதன் மூலம் நம் கழகத்துக்கு வலுவையும், பெருமையையும் தேடித் தருகிறீர்கள்.
முன்னேற்றத்திற்கு முடிவு என்பதே கிடையாது. ஒவ்வொரு நாளும் செய்யும் பணியை மேலும் சிறப்பாக செய்யக் கற்றுக் கொண்டால் நம்முடையவளர்ச்சியை, வெற்றியை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது.
இந்த ஆண்டு கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள் யாரும் என்னை பிறந்த நாள் அன்று நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications