சங்கரராமன் கொலை-மேலும் 5 பேருக்கு ஜாமீன்
சென்னை:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2004ம் ஆண்டு நவம்பர் மாதம் வரதராஜ பெருமாள் கோவில் அலுவலகத்திற்குள் வைத்து சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் அவரது தம்பி ரகு, கூலிப் படைத் தலைவன் அப்பு உட்பட 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு உட்பட 10 பேர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
இந் நிலையில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அனில்குமார், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், கதிரவன், ஜின்னா ஆகியோர்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது அரசு வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி,அனில்குமார் உட்பட ஐந்து பேரூம் கொலை வழக்கில் நேரடியாக தொடர்பு உடையவர்கள். எனவே அவர்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாதுஎன்றார்.
இதற்கு எதிர்தரப்பு வக்கீல்கள், முக்கிய குற்றவாளிகளே ஜாமீனில் வெளியே வந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ரகுபதி, 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ. 10,000 சொந்த ஜாமீன், அதற்கு ஈடான இரு நபர்ஜாமீன் செலுத்தி காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என தனது உத்தரவில் தெரிவித்தார்.
மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரியில் தங்கி அங்குள்ள நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும் அவர்களுக்குநிபந்தனை விதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications