எல்லையில் தமிழ் பெயர் பலகைகள் அழிப்பு:சர்சுகளில் தமிழுக்கு தடை கோரும் கன்னடர்கள்
பெங்களூர் - மைசூர்:பெங்களூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் ஆனைக்கல் பகுதியில் தமிழ் பெயர் பலகையை கன்னடஅமைப்பினர் தார் பூசி அழித்தனர்.
அதே போல குமாரனப்பள்ளி பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துக்களையும்அழித்தனர். மேலும் ஓசூர்-ஆனைக்கல் ரோட்டில் வழி நெடுகிலும் இருந்த தமிழ் பெயர் பலகைகளை கருப்புமை மற்றும் தார் பூசி அழித்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
![]() |
ஓசூரில் இருந்து ஆனைக்கல் நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு கும்பல் வழிமறித்து மீண்டும் ஓசூருக்கே திரும்பிப் போகுமாறு மிரட்டி அனுப்பினர். இதனால் அங்கு பீதி நிலவியது.இவ்வளவு நடந்தபோதும் கர்நாடக போலீசார் இந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
தமிழக-கர்நாடகா எல்லையில் பெங்களூரை ஒட்டியுள்ள கொத்த கொண்டப்பள்ளி, கெம்பட்டி,பொம்மண்டப்பள்ளி, குமரனப்பள்ளி, குட்டனப்பள்ளி, மாயநாயக்கன் பள்ளி, கொர்னூர் உள்ளிட்டகிராமங்களில் பெரும்பாலும் தமிழர்கள் தான் வசிக்கின்றனர். இங்கு புகுந்த கன்னட அமைப்பினர் தமிழ் பெயர்பலகைகளை ஒன்றுவிடாமல் அழித்தனர். இதனால் எல்லையில் பீதி நீடிக்கிறது.
இந் நிலையில் கர்நாடகத்தில் கிறிஸ்துவ ஆலயங்களில் தமிழ் பிரத்தனை ஜெபக் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக கத்தோலிககன்னட கிறிஸ்தவர்கள் சங்கம் கோரியுள்ளது. இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரபேல் ராஜ் கூறுகையில்,
பெங்களூர், மைசூர், மாண்டியா, கோலார் மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழில் பிரார்த்தனை நடத்துவதை நிறுத்த வேண்டும். இந்தக்கூட்டங்களை புறக்கணிக்க வேண்டும் கிறிஸ்தவ ஆலயங்களில் தமிழ் பிரார்த்தனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியான நாள் முதல் கடந்த 16 நாட்களாக கர்நாடகத்தில் தமிழ் படங்கள்திரையிடப்படவில்லை. தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications