கேரளத்துக்கு எதிரான பந்த்-ஸ்தம்பித்தது கோவை
கோவை:சேலம் கோட்டம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளாவைக் கண்டித்து கோவை மாநகரில் இன்றுமுழு அடைப்புப் போராட்டம் நடந்தது. இதனால் நகரமே வெறிச்சோடிப் போனது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துவிட்டது. பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள், டாக்ஸிகள்இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல தனியார்நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. வெளியூர் பஸ்கள் கோவைக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன.
கோவை, திருப்பூர், போத்தனூர் ஆகிய பகுதிகளை திட்டமிட்டபடி சேலம் கோட்டத்துடன் இணைக்கவலியுறுத்தி இந்த பந்த் நடந்தது. பந்தையொட்டி நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பந்தையொட்டி கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் முன் மறியல் போராட்டங்களும் நடந்தன. இன்றுகாலை பாலக்காடு-திருச்சி பாஸஞ்சர் ரயிலை கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மறித்து போராட்டம்நடத்தினர். போலீசார் வந்து அவர்களை கலைத்த பின் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச்சென்றது.
இன்று கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டதால் நீதிமன்றப் பணிகள் முழுமையாகபாதிக்கப்பட்டன. நகரமே வெறிச்சோடிக் கிடந்தது. கோவை சென்ட்ரல் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம்,உக்கடம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள் காலியாகக் கிடந்தன.
கோவை-கேரளா இடையிலான பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதே போல கேரளத்தில்இருந்து கோவை வரும் பஸ்கள் வாளையாரிலேயே நிறுத்தப்பட்டன.
சேலம் கோட்டம் உருவாவதைத் தடுக்க கேரள அரசியல்வாதிகளும், ரயில்வேயில் உள்ள கேரள அதிகாரிகளும், டெல்லியில் காங்கிரசுக்குநெருக்கமாக உள்ள மூத்த கேரள அதிகாரிகளும் முயன்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள தென்னக ரயில்வே தலைமையகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு மலையாள அதிகாரியும் இந்த உள்குத்துவேலையில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications