பெண் கற்பழித்துக் கொலை: மகனும் படுகொலை
பவானி:ஈரோடு மாவட்டம் பவானி அருகே விதவைப் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். அதைப் பார்த்து விட்ட 5 வயது மகனையும்குற்றவாளிகள் கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர்.
பவானி அருகே காளிங்கராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரும், மனைவி பேபியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து விஜயா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார் பழனிச்சாமி.
![]() |
விஜயாவுக்கு, கதிரவன் என்ற 5 வயது மகன் இருந்தான். சமீபத்தில் பழனிச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனது அத்தை மாதேஸ்வரிவீட்டுக்கு அருகே இடம் பெயர்ந்த விஜயா, தனது மகனுடன் வசித்து வந்தார்.
கதிரவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் யுகேஜி படித்து வந்தான். தினசரி ஆட்டோவில் போவது வழக்கம். நேற்று காலையும் வழக்கம் போலஆட்டோ வந்தது. ஆனால் கதிரவன் வரவில்லை. இதையடுத்து ஆட்டோ டிரைவர், விஜயாவின் உறவினர் மாதேஸ்வரியிடம் போய்விசாரித்துள்ளார்.
இதையடுத்து மாதேஸ்வரி விஜயாவைக் கூப்பிட்டபடி அவரது வீட்டுக்குள் போனார். அங்கு தாயும், மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக்கிடந்தனர்.
விஜயாவின் உடைகள் அலங்கோலமாக கிடந்தன. அவரைக் கற்பழித்து கொலை செய்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இதை கதிரவன்பார்த்திருக்க வேண்டும், அவன் கூச்சல் போட்டால் ஆபத்து என்று கருதி அவனையும் கழுத்தை அறுத்து கொலைகாரர்கள் கொன்றிருக்கிறார்கள்,
குற்றவாளிகள் வீட்டின் புகை போக்கி வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை குறித்து போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications