மறு தேர்தல் ஒரு வெட்கக்கேடு: வைகோ
சென்னை:சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியும் தேர்தல் ஆணையர் பதவியில் சந்திரசேகரன் ஒட்டிக் கொண்டிருப்பதும், மறு தேர்தலையும் அவரதுதலைமையிலேயே நடத்தியிருப்பதும் வெட்கக் கேடான சம்பவம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் பங்கேற்பதில்லை என்று அதிமுகவும், மதிமுகவும்முடிவு செய்தன. இந்த முடிவு சரியானதுதான், நியாயமானதுதான் என்பதை ஞாயிற்றுக்கிழமை சென்னை வாக்காளர்களும், தேர்தலைப்புறக்கணித்து நிரூபித்துள்ளனர்.
காலை 10 மணி வரை 10 சதவீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை. பிற்பகலுக்கு மேல் பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை கள்ளஓட்டுக்கள்தான். ஆளுங்கட்சியினரே போட்ட ஓட்டுக்கள் இவை.
சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தும் கூட தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து சந்திரசேகரன் விலகாமல் ஒட்டிக் கொண்டிருப்பதுவியப்பைத் தருகிறது.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, திமுக கூட்டணியில் ஒரு கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சந்திரசேகரனை விமர்சித்துள்ளது, பதவிவிலகக் கோரியுள்ளது. ஆனால் சந்திரசேகரன் விலகவில்லை, அவரை விலக்க அரசும் நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகாவிட்டால் அதற்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினும்பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
(அய்யா வைகோ, எங்கே போயிடீங்க இத்தனை நாள்? தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு வந்திருக்கு.. படிச்சீங்களா?.. வாயே திறக்ககாணோம்?)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications