உ.பி.-ஜெவுக்கு அருகதை உண்டா?-காங் தாக்கு
சென்னை:திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்திப் பேசி வரும் ஜெயலலிதாவுக்கு, உத்தரப் பிரதேச மாநிலம் விவகாரம்குறித்துப் பேச அருகதையோ, தகுதியோ கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து இன்னும் அரசியல் கட்சிகள் எந்த ஆலோசனையையும் தொடங்கவில்லை. அரசியல் கட்சிகளின் தற்போதையகவனம் எல்லாம் உத்தரகாண்ட், மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலில்தான் உள்ளன.
ஜூலை மாதம்தான் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதுகுறித்து பேச இப்போது எந்த அவசியமும்இல்லை.
முலாயம் சிங் அரசை யாரும் டிஸ்மிஸ் செய்யத் தேவையில்லை. பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்த 13எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், உ.பி. அரசு தானாகவே கவிழ்ந்து விடும்.
இன்னும் 20 எம்.எல்.ஏக்களின் நிலை கேள்விக்குரியதாக உள்ளது. எனவே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள எம்.எல்.ஏக்களை விலை பேசும்குதிரை பேரத்தில் முலாயம் சிங் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதைத் தடுக்கவே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சிறு சிறு பிரச்சினைகளுக்குக் கூட அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி வருபவர் ஜெயலலிதா. அவர் உ.பி. அரசைக்கலைக்கக் கூடாது என்று கூறுவதில் எந்த அர்த்த.ம் இல்லை, அப்படிப் பேச அவருக்குத் தகுதி கிடையாது.
உ.பி. விவகாரத்தைப் பேசுவதன் மூலம் தன்னைத் தேசிய தலைவராக அடையாளம் காட்டிக் கொள்ள முனைகிறார் ஜெயலலிதா. ஆனால் அதுநிறைவேறாது.
உ.பி. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விட்டு, அந்த மாநிலத்தை குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்க விடாமல் செய்யகாங்கிரஸ் சதி செய்கிறது என்று ஜெயலலிதா கூறுவதில் உண்மை இல்லை.
சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து விஷயங்களிலும் ஒருமித்தகருத்தின் அடிப்படையிலேயே அனைத்து .டிவுகளையும் எடுக்கிறது என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications