கனிமொழி என் பேரை காப்பாற்றுவார்-கருணாநிதி
சென்னை:தமிழ் மொழியைப் பரப்பும் பணியில், கலையைப் பரப்பும் பணியில், தமிழை வளர்க்கும் பணியில் கனிமொழி எனது வழித்தோன்றல் என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை சங்கமம் என்ற பெயரில் தமிழ் பண்பாட்டு கலை விழா சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்வ>ன் மகள் கனிமொழியைஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ் மையம் ஆகியவை இணைந்து இந்த ஒரு வார கால விழாவைநடத்துகின்றன.
ஐஐடி திறந்தவெளி அரங்கில் நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இந்த பண்பாட்டுக் கலைவிழாவைத் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த மாலை நேரத்தில் தமிழ்க் கடலில் நீந்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். சென்னை மாநகர மக்களுக்குஇந்த வாய்ப்பு ஒரு வார காலத்திற்குக் கிடைக்கவுள்ளது சந்தோஷம் தருகிறது.
இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் எனது வழித்தோன்றல் கனிமொழியைக் காண்கிறேன். வழித்தோன்றல் என்றால், கவிதை வழியில்வழித்தோன்றல், தமிழ் மொழியில் வழித்தோன்றல், உழைப்பு, ஆர்வத்தில் எனது வழித்தோன்றல், கலையின் வழித்தோன்றல் என்ற முறையில்கனிமொழியைக் காண்கிறேன்.
கனிமொழி பிறந்தது, உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது. அண்ணா தலைமை தாங்கிய நடத்திய அந்த உலகத் தமிழ் மாநாட்டின்போதுபிறந்ததால்தானோ என்னவோ, இன்று தமிழை உலகத்திலே பரப்புகிற இந்த பணியை ஏற்றிருப்பதாக கருதுகிறேன்.
அந்த வகையில் கனிமொழி என்னுடைய வழித்தோன்றலாக அமையுமானால், எனக்குப் பிறகு அந்தப் பணியை ஆற்ற என் குடும்பத்திலே ஒருவழித்தோன்றல் உருவாகி இருக்கிறது என்ற நிம்மதி எனக்கு ஏற்படும். நான் வழித்தோன்றல் என்றுதான் குறிப்பிட்டேன்.
இங்கே பல நண்பர்களைப் பார்க்கிறேன். தோட்டா தரணியைப் பார்க்கிறேன். அவரைப் பார்க்கும்போது தோட்டா தரணி உருவாக்கிய இந்தஅருமையான அரங்கம் ஞாபகத்தில் சுழலவில்லை. ஆனால் அவரது தந்தை தோட்டாதான் எனது ஞாபகத்தில் சுழன்று வருகிறார்.
தோட்டா, எனது படங்களுக்கு அந்தக் காலத்தில் ஆர்ட் டைரக்டராக இருந்தவர். இன்று தோட்டாவின் வழித்தோன்றல், என் கண் எதிரேஇப்படிப்பட்ட அருமையான மாளிகையை உருவாக்கியுள்ளார் என்றால், வழித்தோன்றல்கள் நிச்சயமாக நம்மை ஏமாற்ற மாட்டார்கள், நம்முடையகனவை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு அடையாளமாகும்.
பிரகாஷ் ராஜ் பார்த்தால்தான் திடகாத்திரமாக, ஆஜானுபாகுவாக தெரிகிறார். ஆனால் அவருக்கு என்னைப் பார்த்தாலே வெட்கம், நாணம் வந்துவிடும். அவருக்கும், எனக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு என்ரால், பேசாத உறவு, மவுனமான காதல். நான் அதிகமாக அவரை ரசிக்கிற ஒருரசிகன்.
ஆனால் என்னைப் பார்த்தாலே அவர் ஓடி விடுவார். வேண்டுமானால் அவரிடமே கேட்டுப் பாருங்கள். இரண்டு மூன்று முறை நான் முதல்வராகஇருந்தபோது விழாக்களில் அவருக்குப் பரிசு வழங்கியிருக்கிறேன். ஆனால், வாங்கிக் கொண்டு வணக்கம் கூட சொல்லாமல் ஓடி விட்டார்அவ்வளவு வெட்கம், நன்றி கூட சொல்லாமல் போய் விட்டார், அவ்வளவு நாணம்.
எனது வசனத்தை இன்று பேசி பலரின் கைத்தட்டலையும் வாங்கி விட்டார் என்றார் கருணாநிதி.
பின்னர் சங்கே முழங்கு என்ற இயல், இசை, நாடக நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதி ரசித்துப் பார்த்தார். இந் நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு அரங்கேற்றிய புறநானூற்றுக் கவிதை அனைவரையும் கவர்ந்தது.
தப்பாட்டம், நையாண்டி மேளம், தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நடனங்களும் இடம் பெற்றன. காவடிக் கலைஞர் ஒருவரின்காவடியாட்டம் பெரும் கைத்தட்டலைப் பெற்றது.
பிறப்பால் கன்னடராக இருந்தாலும் தமிழ் மீது தனி ஆர்வமும் பற்றும் கொண்டவர் பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications