தமிழ் சேனல் கட்-பதிலுக்கு பணம் கட்:புலம்பும் கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
பெங்களூரு:மொழி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை காப்பாற்ற கர்நாடகா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக தமிழர்சங்கம் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளது.
சங்கத்தின் தலைவர் இராசு. மாறன் எழுதியுள்ள கடிதத்தில்,
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் கர்நாடக தமிழர்கள் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர். கர்நாடக திமுக, அதிமுக உட்படஅனைவரும் கர்நாடக அரசுக்கு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். கர்நாடகத்தின் காவிரி பாசன பகுதிகளில் வாழும் தமிழர்கள் உட்பட பலதமிழ் அமைப்புகள் காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக போராட்டங்களும், ஊர்வலங்களையும் நடத்தியுள்ளனர்.
இப்படி இருக்கையில் சில மொழி வெறியர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. கர்நாடகம் மற்றும் தமிழகமாநிலங்களுக்கிடையே எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் சில கன்னட தலைவர்கள் மக்களிடையே உணர்வுகளை தூண்டிவிடுவதும், இரண்டு மொழிபேசும் மக்களுக்கிடையிலான போராட்டங்களாக மாற்ற முயற்சித்து வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பிரச்சனை இரண்டு மொழி பேசும் மக்களுக்கு இடையேயான போராட்டம் அல்ல என்பதை மறந்து விடுகிறோம். தமிழ்த் திரை அரங்குகள் மீதுவன்முறை நடத்துவது, தமிழ்ப் பத்திரிகைகளை எரிப்பது, தமிழ் மொழி சேனல்களை நிறுத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதுஎவ்வகையிலும் நியாயமானதாக தோன்றவில்லை.
சகோதரத்துவத்துடன் பழக வேண்டிய மக்களை தமது சுய நல நோக்கதிற்காக பிரித்தாண்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. மொழியின்பெயரால் ஒரு குறிப்பிட்ட மொழியினர் மீது துவேஷம் காட்டிவருவது கர்நாடக மாநிலத்தில் மட்டுமே நடந்து வருகிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியிட்ட நாள் முதல் தமிழ் சேனல்கள் முடக்கப்பட்டுவிட்டன. தேசிய ஒளிபரப்பான பொதிகை சேனலும் கூடமுடக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 50 லட்சத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் நன்குஅறிவீர்கள்.
எங்களுடைய அடிப்படை உரிமையை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் சட்டத்தை காக்க வேண்டிய அதிகாரிகள் சில மொழிஅமைப்புகளின் வேண்டுகோளுக்கு தலை வணங்கி வருகின்றனர்.
கர்நாடக தமிழர்கள் கன்னட மொழி மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை யாரும் மறந்து விட முடியாது. தொலைக்காட்சி என்பதுபொழுது போக்கும் சாதனம் ஆகும். இதை முடக்குவது மனித உரிமைகளை மீறும் செயலாகும். இது போன்ற செயல்பாடுகள் கன்னடர், தமிழர்உறவுக்கு பூசல் ஏற்படுத்தவே உதவும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தமிழ் பேசும் நாங்கள் மற்ற மொழி பேசுவோரிடையே சுமுகமான உறவினையே விரும்புகிறோம். எனவே சிறுபான்மையினரின் அடிப்படைஉரிமைகளை காக்க வேண்டிய கடமையை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இங்குள்ள தமிழர்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ் சேனல்களை உடனடியாக ஒளிபரப்ப வேண்டியநடவடிக்கைகளை கர்நாடகா அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கேபிள் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் காவிரி தீர்ப்பை கண்டித்து கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் பெங்களூரில் போராட்டம் நடந்தது.
கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க தலைவர் பேட்ரிக் ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,
கேபிளில் தமிழ் சேனல்களை துண்டிக்க வேண்டும் என்று எங்கள் சங்கத்தினரோ, அந்தந்த பகுதியின் உள்ள ஆபரேட்டர்களோ முடிவுசெய்யவில்லை. சர்வீஸ் புரோவைடர்களிடம் சில கன்னட அமைப்பினர் கேட்டுக் கொண்டதால் தமிழ் சேனல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.இதற்கும் கேபிள் ஆபரேட்டர்களுக்கும் சம்பந்தமில்லை. தமிழ் சேனல்கள் துண்டிக்கப்பட்டதால் தமிழர் வாழும் பகுதிகளில் ஆபரேட்டர்களுக்கும்பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தமிழ் சேனலை ஒளிபரப்பு செய்யுங்கள் பணம் கொடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். பல வாடிக்கையாளர்கள் கேபிள்இணைப்பே வேண்டாம் என்று கூறுகின்றனர். அவர்கள் தூர்தர்ஷன் செட் ஆப் பாக்ஸ் சிஸ்டம், டிடிஹெச் ஆகிய சேவைகளை நாடி வருகின்றனர்.
மீண்டும் தமிழ் சேனல்கள் விரைவில் ஒளிபரப்பப்படும். இதுகுறித்து ஆலோசிக்க கேபிள் ஆபரேட்டர்கள், சர்வீஸ் புரோவைடர் மற்றும் முக்கியபிரமுகர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளோம். தமிழ் சேனல்களை ஒளிபர்பபு செய்வதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
இந் நிலையில் நேற்று இரவு சிறிது நேரம் விஜய் டிவி, கே டிவி முதலிய சேனல்கள் ஒரு சில பகுதிகளில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு சில பகுதிகளில்கேபிள் டிவியில் தமிழ் படங்களும் போடப்பட்டன.
மாத கடைசி நெருங்குவதால் வீடுகளில் கேபிள் டிவி கட்டணத்தை வசூலிக்கப் போகும் முன் தமிழ் சேனல்களை ஒளிரப்ப கேபிள் டிவியினர்தீவிரம் காட்டுகின்றனர். தமிழ் சேனல்களை ஒளிபரப்பாமல் தமிழர்களின் வீடுகளில் பணம் வசூலிப்பது சிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications