கருணாநிதிக்கு கலாம் வழங்கும் பாரதி விருது!
சென்னை:முதல்வர் கருணாநிதிக்கு 23ம் தேதி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாரதியார் தமிழ் செம்மல் விருதினைகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழங்குகிறார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகிற 23ம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 23ம் தேதி சென்னை வரும் கலாம்,தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இதுதவிர குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.டி) நடைபெறும் சர்வதேச மாநாட்டையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலில் கலாம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா, உயர் கல்வி அமைச்சர்பொன்முடி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் பார்வையற்ற மாணவர் மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர் ஆகியோர் உள்பட 20 மாணவ, மாணவியருக்கு தங்கப் பதக்கங்களைகலாம் வழங்குகிறார். பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார்.
170 ஆண்டு கால கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாறு அடங்கிய இணைய தளத்தை அமைச்சர் வேலு தொடங்கி வைக்கிறார். சர்வதேச சமூக சேவைமையத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குரோம்பேட்டை எம்.ஐ.டி.க்கு கலாம் செல்கிறார். அங்கு சிக்னல் பிராசசிங் கம்யூனிகேஷன்ஸ் அண்ட்நெட்வொர்க்கிங் என்பது குறித்த சர்வதேச மாநாட்டை கலாம் தொடங்கி வைக்கிறார்.
இதை முடித்துக் கொண்டு மகளிர் கிறிஸ்தவக் கல்லூரிக்கு கலாம் செல்கிறார். அங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுசிறப்புரையாற்றுகிறார்.
அதன் பின்னர் கல்லூரி வளாகத்தில் உள்ள, 225 ஆண்டு வயது டவ்டன் இல்லத்திற்கு கலாம் விஜயம் செய்கிறார். அங்கு சில நிமிடங்களை அவர்செலவிடுகிறார்.
இந்த இல்லம் 1780ம் ஆண்டு பெஞ்சமின் ரோபக் என்பவரால் கட்டப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியில், வேலை பார்த்து வந்த ராணுவ வீரர் சர்ஜான் டவ்டன் இந்த இல்லத்தை தனதுடமையாக்கினார். அதனால் அவரது பெயர் இந்த இல்லத்திற்கு வந்தது.
1922ம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் இந்தக் கல்லூரிக்கு வந்துள்ளார். 1925ல் மகாத்மா காந்தியும் இங்கு விஜயம் செய்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அன்று இரவு சென்னையில் தங்கும் கலாம், அடுத்த நாள் கோவை செல்கிறார். அங்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பாரதியார் தமிழ் செம்மல் விருதினை முதல்வர் கருணாநிதிக்கு வழங்கி கெளரவிக்கிறார்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டது ஆகியவற்றைப் பாராட்டி கருணாநிதிக்கு இந்தவிருதினை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இதைத் தொடர்ந்து தென்னிந்திய ஜவுளி ஆய்வு மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், ஊட்டியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியிலும் கலாம் கலந்துகொள்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications