காவல் நிலையத்தில் வக்கீல்-காக்கிகள் அடிதடி!
செங்கம்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலையத்தில் வழக்கு குறித்த விவரம் கேட்கச் சென்ற வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும்இடையே கடும் மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் மனோகரனின் ஜூனியர் முருகன். ஒரு வழக்கு தொடர்பா சில தகவல் அறிய செங்கம் காவல்நிலையத்திற்கு அவர் சென்றார்.
அப்போது காவல் நிலையத்தில் எஸ்.ஐ. தமிழரசியிடம் கேட்டுள்ளார். காத்திருங்கள் கூறுகிறோம் என்று தமிழரசி கூறியுள்ளார். ஆனால் இப்போதேவிவரம் வேண்டும் என்று முருகன் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன், போலீஸ்காரர் தஞ்சமூர்த்தி ஆகியோர் தமிழரசிக்கு ஆதரவாக பேசி முருகனைகண்டித்துள்ளனர். இது மோதலாக மாறி கைலகலப்பில் இறங்கினர்.
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, தஞ்சமூர்த்தி ஆகியோர் முருகனைத் தாக்கியுள்ளனர். பதிலுக்கு அவரும் அடித்துள்ளார். காவல் நிலையமே இந்த மோதலால்களேபரமாகிப் போனது, நான்கு பேரும் உள்ளேயே கட்டி உருண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் முருகன் கையில் கைவிலங்கை மாட்டி, தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ஏராளமான வழக்கறிஞர்கள் விரைந்து வந்துமுருகனுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர். காவல் நிலையத்தில் இருந்த பொருடகளை அடித்து நொறுக்கினர்.
வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த இந்த மோதலை ஏராளமான பொதுமக்கள் கூடி நினறு வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்துமாவட்ட எஸ்.பி. முருகன் விரைந்து வந்து அனைவரையும் விலக்கி விட்டார்.
அதற்குள் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆட்சித் தலைவர் சத்யபிரசாத் சாஹு, டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ. உள்ளிட்டோரின் கார்களை மறித்துபோராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
பின்னர் மாவட்ட நீதிபதி சந்திரசேகரன், எஸ்.பி. முருகன், வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இதில்உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வக்கீல் முருகன விடுவிக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications