கோவை எக்ஸ்பிரஸ்க்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:கோவை எக்ஸ்பிரஸ்சில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சென்னை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு ரயில் காவல் துறைக்கு ஒரு மர்ம தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவைஎக்ஸ்பிரஸ்சில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்.
இதையடுத்து ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். ஆனால் ரயிலில் வெடிகுண்டு எதுவும்கிடைக்கவில்லை. இது வெறும் புரளி என தெரியவந்தது.
இதனால் கோவை எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications