ராமதாஸ் மீது ஜெ. திடீர் பாசம்-பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:காவிரி நடுவர் மன்ற உத்தரவை மத்திய அரசு கெசட்டில் வெளியிடுவது குறித்து தமிழக அரசு என்னநடவடிக்கை எடுக்கப் போகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நடுவர் மன்றம் 16 ஆண்டு கால விசாரணைக்கு பின் தனது இறுதி உத்தரவை கடந்த 5ம் தேதிவெளியிட்டது. அப்போது டெல்லியில் இருந்த கருணாநிதி "தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது என்றார். ஆனால்,கர்நாடக முதல்வர் தீர்ப்பை முழுவதுமாக படித்து பார்த்து தான் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியும் என்றார்.

சில தினங்களில் அனைத்து கட்சிகளை கூட்டி டெல்லிக்குச் சென்று பிரதமரையும் சந்தித்தார். ஆனால்,தமிழகத்தில் கருணாநிதி விவரம் புரியாமல் மகிழ்ச்சி தெரிவித்தது தான் மிச்சம். இறுதி தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியவிஷயம் அல்ல என்று நானும், ராமதாசும் (அண்ணன கூட சேத்தாச்சா?) எடுத்துச் சொன்னோம். அதற்குஎவ்வித பதிலும் அரசு தரப்பில் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ராமதாஸ் நெருக்கடி தந்தார். இதனால்வேறு வழியின்றி, நிர்பந்தம் காரணமாக, தீர்ப்பு வந்து 15 நாட்கள் கழித்து அனைத்து கட்சி கூட்டத்தைகூட்டினார் கருணாநிதி.

கூட்டத்தில் பேசிய துரைமுருகனும் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று தான் என்று பேசினார். காவிரிபிரச்னையை இத்துடன் விட்டு விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், ஜோதியும் தீர்ப்பில் உள்ள சாதக பாதகங்களை விரிவாக எடுத்துக்கூறினர். அனைத்து தேசிய கட்சிகளும் தங்கள் நிலையை தெளிவான முறையில் தெரிவிக்கவில்லை.அவர்களுக்கு தமிழக நலனைவிட கட்சியின் நலனே பெரிதாக உள்ளது.

தமிழக அரசு தனது நிலையை வெளிப்படுத்தாமல் எதிர்ப்பு வந்தபிறகு "விளக்கம் கேட்கிறோம் என்றுகூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் என்னஎன்பது குறித்து இதுவரை தெரிவிக்கவே இல்லை.

அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பிறகும் நடுவர் மன்ற உத்தரவை மத்திய அரசு கெசட்டில் வெளியிடுவது குறித்துஎன்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று தமிழக அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்பதை இனிமேலாவது விளக்குவது நல்லது. மத்தியில்உள்ள தனது பெரும் செல்வாக்கைப் பயன்படுத்தி கருணாநிதி தமிழக மக்களுக்கு என்ன செய்ய இருக்கிறார்என்பதை தமிழகம் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது என ஜெயலலிதா கூறியுள்ளார்.

உ.பி: வெற்றி.. வெற்றி...:

ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் முலாயம் சிங்கின் ஆட்சியை கலைத்து விட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. இதற்கு அதிமுக, தெலுங்கு தேசம்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால், ஜனாதிபதி ஆட்சி முடிவை மத்தியஅரசு கைவிட்டுள்ளது.

அரசியல் சட்டத்தை களங்கப்படுத்தவும், ஜனநாயகத்தை படுகொலை செய்யவும் காங்கிரஸ் தலைமையிலானஅரசு மேற்கொண்ட முயற்சி எதிர்க்கட்சிகளின் திடமான போராட்டத்தினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

உபியில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும்,பேணிக்காக்கவும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்பது இதன்மூலம்தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+