தமிழாசிரியரை அடித்த மாணவர்கள்!!

Subscribe to Oneindia Tamil

மார்த்தாண்டம்:பக்கத்து விட்டு பெண்ணிடம் சைகை காட்டி பேசிய மாணவரை தட்டிக் கேட்ட தமிழாசிரியரை மாணவர்கள் அடித்து உதைத்தது சம்பவம்மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் லாரன்ஸ். சில தினங்களுக்கு முன் இங்குபடிக்கும் பிளஸ் 2 மாணவன் வினு பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு பக்கத்து வீட்டில் நின்ற பெண்ணிடம் சைகை காட்டி பேசியுள்ளார். இதைபார்த்த ஆசிரியர் வினுவை கண்டித்தார்.

இந்நிலையில் வினுவை சிலர் தாக்கினர். இதற்கு ஆசிரியர் லாரன்ஸ்தான் காரணம் என கருதிய மாணவர்கள், வினுவை தாக்கியவர்கள் மீதும், அதற்குஉடந்தையான ஆசிரியர் லாரன்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துமாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பள்ளிக்கு வந்த தமிழாசிரியர் லாரன்சை பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கேலி செய்தனர். மேலும் தேர்வு எழுத வந்த மாணவர்களைதடுத்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களை லாரன்ஸ் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 5 மாணவர்கள் அவரை அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து ஆசிரியர் களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பெயரில் மாணவர்கள் சஜின், சிவபிரசாத், லால், சுரேஷ, ஜெயராஜ்ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குழித்துறை கல்வி அலுவலகத்தைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த கல்வி அதிகாரிராஜலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களையும், ஆசிரியர்களையும் சமரசம் செய்து வைத்தார்.

பின்பு மாணவர்களின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் அறிவுரை கூறி மாணவர்களைஅவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+