தேமுதிகவிடம் போய் தோல்வியா?:காங்கிரஸ் வேட்பாளர் மனைவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை மாநகராட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளரிடம் தனது கணவர் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த காங்கிரஸ்வேட்பாளரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் 48வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் சங்கர். இவரது மனைவி ராதா (46). தேர்தலில்போட்டியிட வேண்டாம் என தனது கணவரை தடுத்தும், கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என கூறி போட்டியிட்டார்.

ஆனால் தேர்தலில் சங்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சரவணனை விட 210 வாக்குகள் குறைவாக பெற்று தோல்விஅடைந்தார்.

இதனால் மணமுடைந்த சங்கரின் மனைவி ராதா தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்து தீயை அணைத்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ராதாவை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதாபரிதாபமாக இறந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+