புலிகளுக்கு ஆயுத கடத்தல்-கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
தமிழகத்தைக் களமாகக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதை அனுமதிக்க முடியாது. அதுபோல எந்த அமைப்பாவது அல்லதுகட்சிகள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எந்தவித பயமும்,பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைத் தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை தடுத்த நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதற்கும், விடுதலைப்புலிகளுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் தமிழகத்தைக் களமாகக் கொண்டு ஆயுதக் கடத்தலை அனுமதிப்பதற்கும் மிகப் பெரிய அளவில்வித்தியாசம் உள்ளது என்பதை நான் அறிவேன்.
ஈழத் தமிழர்களைக் காக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு விடுத்து வரும் கோரிக்கைகலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுதமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தலாம் என யாரும் நினைத்து விடக் கூடாது.
நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு,புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாக தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்.
ஆயுதக் கடத்தல் தொடர்பாக அரசு அலட்சியமாகவோ, மெத்தனமாகவோ இருக்கவில்லை. சமீபத்தில் பெருமளவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள்,படகுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பலரைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டபடகும் அழிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு இங்கு எந்த அரசியல்கட்சியாவது உதவுவதாக தெரிந்தால் அவர்கள் மீது கண்டிப்பான, உறுதியான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. இதுதொடர்பாக காவல்துறைக்குஉரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பட்டு வேட்டி-ஸ்டாலினுக்கு அறிவுரை:
முன்னதாக தஞ்சையில் நடந்த மறைந்த அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி,
இங்கே ஸ்டாலின் பேசும்போது, மணமகன் மகேஷ் அமைதியானவர். ஆனால், திருமணத்துக்கு பட்டு வேட்டியில் வர வேண்டும் என மிரட்டினார். அதனால் பட்டு வேட்டியில் வந்தேன் என்றுகூறினார்.
பட்டு வேட்டி உடுத்தித் தான் வர வேண்டும் என்ற மிரட்டலை நானாக இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இதே திமுக கரை வேட்டியுடன் வந்து திருமணத்தை நடத்தி வைத்திருப்பேன். இந்தமிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டாய் என்று எண்ணித்தான் ஸ்டாலினை இளைஞரணி தலைவராக்கினோம்.
மிரட்டல்கள் பல வழியில் வரும். பாசத்தோடு, பயமுறுத்தலோடு, ஒதுங்கி, பதுங்கி மிரட்டல்கள் வரும். அதற்கெல்லாம் பயப்படக்கூடாது. எதற்கும் பயப்படாமல் இயக்கத்தை கட்டிக் காப்பாற்றவேண்டும் என்ற உறுதி வேண்டும்.
ஸ்டாலின் என்ற பெயருக்கு இரும்பு மனிதன் என்று பெயர். துரும்பு மனிதனாக இருக்க கூடாது. இன்று மாலைக்குள் ஸ்டாலின் இடுப்பில் பட்டு வேஷ்டி இருக்கக் கூடாது. ஏழை, எளியவர்களிடமிருந்துதனித்து இருக்கக் கூடாது என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications