இலங்கை தமிழர்கள் கணக்கெடுப்புக்கு உத்தரவு
சென்னை:தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதக் கடத்தல் அதிகரித்துள்ளதைத் தொடர்நது தமிழகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் குறித்த விவரங்களைசேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சமீப காலமாக சென்னை, மதுரை, தூத்தக்குடி வழியாக இலங்கைக்கு ஆயுதம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுளளனர். பெருமளவிலான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கியூ பிரிவு போலீஸாரும், மத்திய உளவுத் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆயுதக்கடத்தலுக்கு தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் சிலர் உதவியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பை அரசு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அகதிகள்குறித்த அனைத்து விவங்களையும் கியூ பிரிவு போலீஸார் சேகரித்து வருகினறனர்.
இதுதவிர, முகாம்களில் தங்காமல், தனியாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படவுளளது. இவர்களின்செயல்பாடுகள் கண்காணிக்கப்படவுள்ளது.
புலிகளை பிடிக்க அதிரடி வேட்டை:
இதற்கிடையில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு ஆயுதம் கடந்த முக்கிய காரணமாக இருந்த விடுதலைப் புலிகள்இயக்கத்தை சேர்ந்த கிருபா என்பவரைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் அலுமினிய குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார்கடந்த சில தினங்களுக்கு முன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செல்வராஜ், குணசேகர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அலுமினிய தகடுகள், பவுடர்கள் போன்றவற்றை வாங்கி கொடுப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர்அருகே உள்ள பொந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளி, பூமி, கண்ணன், பெரியசாமி, கர்ணன், முருகநாதன் ஆகிய 6 பேரை நேற்று போலீசார்கைது செய்தனர்.
அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ஆயுதம் கடந்த முக்கிய காரணமாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தகிருபா என்ற கிருபாகரன் என தெரிய வந்துள்ளது. இவர் தற்போது தமிழ்நாட்டில் தான் பதுங்கி இருப்பதாகத் தெரிகிறது.
அதே போல கிருபாகரனுக்கு உதவியாக இருந்த கண்ணன், வேலுசாமி ஆகியோரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications