எதிர்ப்பை மீறி மகள் காதல் கல்யாணம்!:மருமகனைக் கடத்திய மாமனார் !!

Subscribe to Oneindia Tamil

சென்னை:தங்களது எதிர்ப்பை மீறி மகளைக் காதலித்துத் திருமணம் செய்த வாலிபரை, அடியாட்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார் மாமனார்.இதையடுத்து தனது கணவரை மீட்டுத் தரக் கோரி அந்தப் பெண் சென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் புகார் கொடுத்துள்ளார்.

மலேசியாவில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தவர் மகேஷ் (27). இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ளஉப்பூர் கிராமம். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வைகை வடகரையைச் சேர்ந்தவர் கருப்பி. இவரும் மகேஷ், வேலை பார்த்து வந்தநிறுவனத்தில் டெய்லராக இருந்தார்.

Sathya and Mahesh

அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. மகேஷை கருப்பிக்குப் பிடித்துப் போக தனது மகள் சத்யாவை (20) திருமணம் செய்துதருவதாக வாக்களித்தார். மேலும், தனது மகளுடன் போனில் பேசவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.

போன் மூலம் சத்யாவும், மகேஷும் பேசிப் பேசி காதல் வளர்த்தனர். சத்யாவுக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்தார் மகேஷ்.சமீபத்தில் வேலை ஒப்பந்தம் முடிந்து, மகேஷும், கருப்பியும் ஊர் திரும்பினர்.

ஊர் திரும்பியவுடன் சத்யா குடும்பமும், மகேஷ் குடும்பமும் நட்புடன் பழகியது. இந் நிலையில் சத்யாவுக்கு அவரது அப்பா பொன்னுச்சாமி வேறுஇடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். இது மகேஷுக்குத் தெரிய வர, அவர் கருப்பியை சந்தித்து நியாயம் கேட்டார்.

அதற்கு கருப்பியோ, எனது கணவரை மீறி எதுவும் செய்ய முடியாது, சத்யாவை மறந்து விடு என்று கூறி விட்டார். ஆனால் சத்யாவோ, மணந்தால்மகேஷ் என்று பிடிவாதம் பிடிக்க அடித்து வீட்டோடு சிறை வைத்தனர்.

ஆனால் அவர்களின் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்த சத்யா, மகேஷை தஞ்சமடைந்தார். இதையடுத்து மகேஷுக்கும், சத்யாவுக்கும்முத்துப்பேட்டையில் வைத்து பதிவுத் திருமணம் நடந்தது. அதன் பின்னர் வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தை ஆரம்பித்தார் மகேஷ்.

முத்துப்பேட்டையை சேர்ந்த கண்ணன், செந்தில் ஆகியோரை மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்காக 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார்மகேஷ். தேனாம்பேட்டையில் சரவணன் என்பவரை சந்திக்க அவர்கள் காத்திருந்தனர். எல்டாம்ஸ் சாலையில் அவர்கள் சரவணனை எதிர்பார்த்துஇருந்தபோது டாடா சுமோ காரில் பொன்னுச்சாமி, கருப்பி உள்ளிட்டார் வந்தனர்.

மகேஷை தங்களது கார்களில் போட்டுக் கொண்டு பறந்தனர். இதைப் பார்த்து அதிர்ந்த செந்திலும், கண்ணனும், தேனாம்பேட்டை போலீஸில் புகார்கொடுத்தனர். ஆனால் மதுரை போலீஸ்தான் மகேஷை அழைத்துச் செல்வதாக கூறிய தேனாம்பேட்டை போலீஸார் மதுரைக்குப் பாய் புகார்கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து மகேஷ் கடத்தப்பட்டது குறித்து சத்யா மற்றும் மகேஷ் வீட்டுக்கு தகவல் பறந்தது. இதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்த சத்யாவும்,மகேஷ் குடும்பத்தாரும், ஆணையர் லத்திகா சரணிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர்.

பின்னர் சத்யா கூறுகையில், சரவணனிடம் கொடுப்பதற்காக 4 லட்சம் ரூபாய் பணத்தையும் மகேஷ் எடுத்து வந்திருந்தார். அதையும் எனது தந்தைபறித்துக் கொண்டு சென்று விட்டார். எனது அப்பாவிடம் நான் போனில் பேசியபோது, நீ உடனடியாக நமது வீட்டுக்கு வந்து விடு. இல்லாவிட்டால்மகேஷை உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டினார். எனது கணவர் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை என்று கூறி கதறினார் சத்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+