கேராளாவுக்கு எதிராக அவினாசியிலும் பந்த்!
அவினாசி:சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்க தடைகளை ஏற்படுத்தி வரும் கேரளாவை கண்டித்து வரும் 27ம் தேதி அவினாசியில் முழு அடைப்புபோராட்டம் நடத்தப்படவுஉள்ளது.
கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுபாளையத்தை தொடர்ந்து அவினாசியிலும் இந்த பந்த் நடக்கிறது. இந்த பந்துக்கு அனைத்துக் கட்சிகளும்ஆதரவு தெரிவித்துள்ளனன. இதனால் பிற நகர்களில் நடந்ததைப் போல பந்த் முழுமையான வெற்றி பெறும் என்று தெரிகிறது.
27ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. அன்று கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்,பனியன் கம்பெனிகள், விசைத்தறி கூடங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைகளை உடைத்து...
இதற்கிடையே சேலத்தில் ரயில்வே கோட்டம் தடைகளைத் தாண்டி, கதவுகளை உடைத்துக் கொண்டு கண்டிப்பாக உதயமாகும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கோவையில் பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தேவ கெளடா பிரதமராக இருந்தபோது சேலத்திற்கு வந்திருந்தார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். சேலத்தில் ரயில்வேகோட்டம் அமைய வேண்டும் என அவரிடம் கோரினேன்.
அது தரப்படும் என்றார் கெளடா, பரிசீலிக்கப்படும் என்றார், வழங்கப்படும் என்றார். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியும்.
அப்போது அளிக்கப்பட்ட உறுதிமொழி காற்றில் பறந்து போய் இப்போது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், சோனியா காந்தி தலைமை தாங்கி வழி நடத்துகிற ஆட்சியில் நாம் விரும்பியவண்ணம் சேலம் கோட்டம் அமைக்கப்பட்டது.
இதுதொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட்டு, பெயர்ப் பலகை கூட நிறுவப்பப்பட்ட பிறகு சிலர் தேவையில்லாமல் சேலத்தில் ரயில்வே கோட்டம் வருவதற்கான கதவுகளை மூடப் பார்க்கிறார்கள்.
கதவை உடைப்பது என்றாலும் கூட, நிச்சயமாக கதவைத் திறந்து கொண்டு சேலம் கோட்டம் உதயமாகுமம். அது கோவைக்கும் பயன்படும்.
சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்கா போல மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களிலும் அவை அமைக்கப்டும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார்கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications