கலாம் மீண்டும் ஜனாதிபதியாக பாஜக ஆதரவு
சென்னை:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் அப்பதவிக்கு நிறுத்தப்பட்டால் அவருக்கு பாஜக ஆதரவு தரும்என்று அக் கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்குஇன்னும் நாட்கள் உள்ளன. இருப்பினும் இப்பதவிக்கு மீண்டும் கலாம் நிறுத்தப்பட்டால் அவருக்கு பாஜக முழுஆதரவு அளிக்கும்.
போபர்ஸ் வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான குவாத்ரோச்சி அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நினைத்தால், உண்மையாகவே முயற்சிகள் எடுத்தால், குவாத்ரோச்சியைஇந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர முடியும்.
இந்த வழக்கை அப்படியே போட்டுப் புதைத்து விடவே காங்கிரஸ் அரசு முயன்று வருகிறது.ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கை அடியோடு மறந்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது.
குவாத்ரோச்சியின் லண்டன் வங்கிக் கணக்கை முடக்காமல் விட்டு விட்டனர். இதன் மூலம் குவாத்ரோச்சிக்குவிசுவாசமாக நடந்து கொண்டுள்ளார் சோனியா காந்தி.
இப்போது குவாத்ரோச்சி கைது செய்யப்பட்ட விவகாரத்தைக் கூட மறைக்க காங்கிரஸ் அரசு முயலுகிறது. இதன்மூலம் பஞ்சாப், உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் தங்களது கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, தோல்வியைத்தழுவி விடுமோ என்று காங்கிரஸ் பயப்படுகிறது.
குவாத்ரோச்சியை உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு வர பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போபர்ஸ் பிரச்சினை தொடர்பாக மிகவும் கடுமையாக குற்றம் சாட்டிய திமுக, சிபிஐ, பாமக ஆகிய கட்சிகள்இப்போது பேச்சுமூச்சின்றி இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார் வெங்கையா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications