வளைகுடா செல்லும் வேலைக்கார பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்தியாவில் இருந்து அரபு நாடுகளில் 40 வயதுக்குக் குறைவான பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பக் கூடாது என அங்குள்ள இந்தியத்தூதரகங்கள் முடிவு செய்துள்ளன. பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதிலிருந்து காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் வீட்டு வேலைக்கு செல்கின்றனர். வேலைக்குப் போன இடத்தில் பெரும்பாலானபெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். கற்பழிப்பு உள்ளிட்டவை பெருமளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதுதவிர பேசியபடி சம்பளமும் கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து அரபு நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள்கூடி ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில், 40 வயதுக்குக் குறைவான பெண்களை வீட்டு வேலைகளுக்காக அரபு நாடுகளுக்கு அனுப்புவதற்குத் தடை விதிக்குமாறு மத்தியஅரசை அரபு நாடுகளின் இந்தியத் தூதர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்ற மத்திய அரசு 40 வயதுக்குட்பட்ட பெண்களை அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்கு அனுப்பக் கூடாது என அரசு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் 40 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்கள் அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+