ஜெவுக்கு வயது 59-அத்வானி, நாயுடு வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
கோவை:இடைவிடாமல் உழைக்கும் முதல்வர் கருணாநிதியை இளைஞர்கள் ரோல் மாடலாக கருதி அவரைப் போல் உழைக்க முன்வர வேண்டும் என்றுகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், முதல்வர் கருணாநிதிக்கு பாரதியார் தமிழ் செம்மல் விருதினை வழங்கியது.
![]() |
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு முதல்வருக்கு தமிழ்ச் செம்மல் விருதினை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
பாரதியார் இன்று இருந்திருந்தால் 125 வயது ஆகியிருக்கும். ஆனால் அவர் இல்லை, இருந்தாலும் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வாழ்க்கையில் வெற்றி அடைந்தால் நாடு வெற்றி அடையும். அதற்கு நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதை பாஞ்சாலி சபதத்தில் பாரதியார்அழகாக சொல்லியுள்ளார்.
அவரது சொல்படி, இடைவிடாமல் உழைப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார். அவரது உழைப்பைஇப்போதைய இளைய சமுதாயம் பார்த்து, அவரை முன் மாதிரியாக கொள்ள வேண்டும் என்றார் கலாம்.













Click it and Unblock the Notifications