நடுவர் மன்ற தீர்ப்பு நிராகரிப்பு: கர்நாடக அனைத்துக் கூட்டத்தில் தீர்மானம்
பெங்களூரூ:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நிராகரிப்பது என கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முதல்வர் குமாரசாமி தலைமையில் கூடிய கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 5ம் தேதி இறுதி தீர்ப்பு வெளியானவுடன் 6ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், தீர்ப்பின் முழு விவரம் வந்தவுடன்முழுமையாக படித்து மீண்டும் அனைத்து கட்சி கூட்டுவது என அப்போது முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று விதான் செளதாவில் மீண்டும் குமாரசாமி தலைமையில் கூடியது. சுமார் 3 மணி நேரம் இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம்குமாரசாமி பேசுகையில்,
இக் கூட்டத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காவிரி இறுதித் தீர்ப்பில்கர்நாடகாவுக்கு அநியாயம் நடந்துள்ளது. இது குறித்து முழுமையாக ஆலோசித்தோம்.
இந்தத் தீர்ப்பை தொழில்நுட்ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் அடுத்தகட்டமாக சில சட்ட நடவடிக்கைகளை எடுக்கதீர்மானித்துள்ளோம்.
தீர்ப்புக்கு எதிராக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அரசு தனது நன்றியை தெரிவித்துகொள்கிறது. அந்த போராட்டங்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில் தொடரும் என்றார்.
உள்துறை அமைச்சர் பிரகாஷ் கூறுகையில், இன்றைய கீட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதன்படிகாவிரி பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் முறையாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்றும், மூன்றாவதாக நடுவர் மன்றத்திலேயேதீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி படி ரிவ்வியூ பெட்டிசன் தாக்கல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் கன்னட அமைப்பினர், விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொழிசிறுபான்மையினருக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இந்த போராட்டம் தொடரும் என்றார்.
இக் கூட்டத்தில் கன்னட சாளுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் பங்கேற்கவில்லை.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்துக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வருபவர் வாட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications