கருணாநிதி-ராமதாஸ் மோதல் தீவிரம்!
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்த் நடத்த வேண்டும் என பெரும்பாலான கட்சிகள்வலியுறுத்தவில்லை. மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவே கூட, இந்தகோரிக்கையை பலமாக வலியுறுத்தவில்லை என்பதால்தான் பந்த் நடத்த முடிவெடுக்கப்படவில்லை என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்த் நடத்த பாமக கோரியும், அதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது என ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர்தேவ கெளடா வைத்துள்ள கோரிக்கை தவறானது என்று பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா விடுத்துள்ளகருத்தைத்தான் நான் கோவையில், பேசிய போது தெரிவித்திருந்தேன்.
அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் இத்தகை விவாதம் நடத்தப்படுவது நல்லதல்ல என்பதை விளக்கிசோனியா காந்திக்கும் நான் கடிதம் எழுதினேன். எனவே நானும், ராமதாசும் இந்த விஷயத்தில் ஒத்தகருத்தைத்தான் தெரிவித்திருக்கிறோம்.
அதேசமயம், கர்நாடகத்துக்கு இறுதித் தீர்ப்பில் கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்று முதல்வர்கருணாநிதி பேசியிருக்கிறார். அது ஆச்சரியமாக உள்ளது என்று வியப்பு தெரிவித்திருக்கிறார். தஞ்சைநிகழ்ச்சியில் நான் பேசியதைத்தான் இப்படி அவர் கூறியிருக்கிறார்.
நான் தஞ்சையில் பேசியது என்னவென்றால், நாம் வாதாடும்போது தமிழ்நாட்டுக்கு பாசனம் செய்யக் கூடியபரப்பளவு 29.26 லட்சம் ஏக்கர் என்று கேட்டோம். இதிலே நடுவர் மன்றம் அனுமதித்திருப்பது 24.70 லட்சம்ஏக்கர். இதில் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் கர்நாடக மாநிலத்திற்குப் பாசனத்திற்காக அவர்கள் கோரியது 27.28 லட்சம் ஏக்கர். நடுவர் மன்றம்அவர்களுக்கு அனுமதி கொடுத்தது 18 லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர்.
இதை நான் சொல்வதற்குக் காரணம், நாம் ஒன்றும் நஷ்டப்பட்டுவிடவில்லை. நாம் கேட்டதிலே கொஞ்சம்குறைவாகக் கிடைத்தது. ஆனால் கர்நாடகம் கேட்டதிலே கொஞ்சம் அதிகமாகக் குறைந்து விட்டது என்பதுதான்நான் தஞ்சையிலே பேசி முரசொலியில் வெளிவந்துள்ள எனது கருத்தாகும். இந்தப் புள்ளி விவரத்தில் எந்தவிதமுரண்பாடும் இல்லை.
இதற்காக பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமகசார்பில் சொன்னதாகவும், அதைக் கேட்கவில்லை என்றும் வருத்தப்பட்டிருக்கிறார்.
அவரது இந்தக் கருத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர்களது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும்,அதனை வரவேற்று பெரும்பான்மையான கட்சிகள் எதிரொலிக்கவில்லை என்பதாலும், இந்தக் கருத்தைமுதலில் தெரிவித்த அவரது கட்சியின் பிரதிநிதிகள் கூட தீர்மானம் நிறைவேற்றப்படும் நேரத்தில் அதைவலியுறுத்தவில்லை என்பதால்தான் பொது வேலைநிறுத்தம் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையேதவிர, பொது வேலை நிறுத்தம் நடத்தவே கூடாது என்பது நம்முடைய பிடிவாதம் அல்ல என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications