குழப்பும் கெளடா-சதி செய்யும் கர்நாடகாபந்த் நடத்த மறுக்கும் திமுக-ராமதாஸ் சாடல்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கக் கூடாது. முன்னாள்பிரதமர் தேவ கெளடா இந்தப் பிரச்சினையை குழப்பப் பார்க்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாகநாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தேவ கெளடா கோரியுள்ளார். அது ஏற்கப்பட்டிருப்பதாகத்தெரிகிறது.
இந்த கெளடா பிரதமராக இருந்தபோதும், காவிரி நடுவர் மன்றத்தை செயல்படாமல் முடக்கிப் போடுவதற்குஎன்னென்ன இடையூகளை ஏற்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்தார்.
இப்போதும் மத்திய அரசின் கெஜட்டில் இறுதித் தீர்ப்பை வெளியிட விடாமல், நாடாளுமன்றத்தில் விவாதம்நடத்தி குழப்பப் பார்க்கிறார் கெளடா.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதில்லை. நடுவர் மன்றம் ஒருநீதிமன்றத்திற்கு>ய அந்தஸ்தைக் கொண்டது. எனவே அதன் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்வதுசரியல்ல.
நடுவர் மன்றத் தீர்ப்பு கர்நாடகத்திற்குப் பாதகமானது, தமிழகத்திற்குச் சாதகமானது என்ற தோற்றத்தைதிட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். உண்மை அதுவல்ல.
காவிரி பிரச்சினை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள், இறுதியாக வந்த இடைக்காலத் தீர்ப்பு,சமீபத்தில் வெளியான இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை கூர்ந்து கவனித்தால், கர்நாடகம் தொடர்ந்து செய்து வரும்சட்ட மீறல்கள் தெரிய வரும்.
மேலும், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பாசனப் பரப்பளவு 18 லட்சத்து 85 ஆயிரம்ஏக்கர் ஆகும். இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததை விட இது 7 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் அதிகமாகும்.தமிழகத்தின் பாசனப் பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளது.
உண்மை இப்படி இருக்கையில், கர்நாடகத்திற்கு இறுதித் தீர்ப்பில் கொஞ்சம் குறைந்து விட்டது என்று முதல்வர்கருணாநிதி கூறியிருக்கிறார். அது செய்தியாகவும் வந்துள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது.
கர்நாடகத்தின் தொடர் சதிச் செயலால் காவிரிப் பிரச்சினையில், தமிழகம் தனது உரிமைகைளை முற்றிலும்இழந்து விடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதைப் போக்க வேண்டியது தமிழக அரசின்கடமை.
காவிரிப் பிரச்சினையில், தமிழக மக்களின் குரல் ஏகோபித்த முறையில் டெல்லிக்குக் கேட்க வேண்டும் என்றுநினைத்துத்தான் தமிழகம் தழுவிய பந்த் நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோரினோம்.ஆனால் அந்தக் கோரிக்கை ஏனோ ஏற்கப்படவில்லை.
இப்போதும் காலம் கடந்து விடவில்லை. தமிழகத்தின் ஒட்டு மொத்தக் குரலை எதிரொலிப்பது குறித்துசிந்திக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications