67 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ராஜினாமா
லக்ளென:உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மீதான நம்பிக்கை தீர்மானத்தில் மீது நாளை வாக்கெடுப்புநடக்கவுள்ள நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 67 பேர் தங்களதுபதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதன்மூலம் மாயாவதி கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்து மெஜாரிட்டியை காட்ட திட்டமிட்ட முலாயம்சிங்கின் முயற்சிகளுக்கு மாயாவது செக் வைத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி முலாயம் சிங் யாதவ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்துவந்த 13 எம்எல்ஏக்களை உச்சநீதிமன்றம் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்தது.
இதனால், முலாயம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மேலும் அரசு பெரும்பான்மையைஇழந்துவிட்டதாகவும், இதனால் அவரது அரசை கலைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ்ஆகியவை கோரின.
இந் நிலையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக அறிவித்தார் முலாயம் சிங். நாளை (26ம் தேதி) அவர்சட்டசபையில் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட பின் அரசை கலைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் கடைசி வரை பதவியில் இருக்கவிரும்பும் பிற கட்சி எம்எல்ஏக்களை வைத்து மெஜாரிட்டியை எளிதாக நிரூபித்துவிடலாம் என முலாயம் சிங்திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 67 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.மேலும் சில பாஜக, அதிருப்தி சமாஜ்வாடி எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்பட 11 பேரும்பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
மொத்தம் 78 பேர் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். மேலும் இந்த 11 பேரும் பகுஜன்கட்சியில் இணைந்துவிட்டனர்.
இது குறித்து முதல்வர் முலாயம் சிங் கூறுகையில், பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமாசெய்துள்ளதால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படாது. நாளை நடைபெறும் நம்பிக்கைஓட்டெடுப்பில் வெற்றி பெறுவேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications