ரிமோட் கார் டமால்: மாணவன் காயம்
கோவை:கோவையில், ரிமோட் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த 14 வயது மாணவன், அந்தக் காரின் பேட்டரி திடீர் என வெடித்ததால் படுகாயமடைந்தான்.
குனியமுத்தூரில் உள்ள வீட்டு வசதி வா>யக் குடியிருப்பில் வசித்து வருபவர் வளர்மதி. இவரது மகன் தினேஷ்குமார். 9வது வகுப்பு படிக்கும் 14 வயதாகும்தினேஷ்குமார், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
ரிமோட் கார் வைத்து நண்பர்களுடன் விளையாடினார் தினேஷ்குமார். அப்போது கையில் சிகரெட் லைட்டரையும் வைத்திருந்தார் தினேஷ்குமார். இதில் சிகரெட்லைட்டரிலிருந்து கிளம்பிய பொறி, கார் பேட்டரியில் பட்டு அது சத்தமாக வெடித்தது. இதில் தினேஷ்குமாரின் காலில் காயம் ஏற்பட்டது.
தனது தாயாரின் சொல்லையும் மீறி விளையாடச் சென்றதால், கார் வெடித்து காயம் ஏற்பட்டதை சொன்னால் அவ்வளவுதான் என்று பயந்த தினேஷ்குமார், தனதுவீட்டுக்கு வந்து, யாரோ தன் மீது எதையோ வீசிச் சென்றதாகவும், அப்போது அது வெடித்துக் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
பயந்து போன பெற்றோர், கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தகவல் போலீஸாருக்குக் கிடைத்து அவர்கள் வந்து தினேஷ்குமா>டம்விசாரித்தபோது உண்மையைச் சொன்னார்.












Click it and Unblock the Notifications