டாக்டர், நர்ஸ் இல்லை - சாலையில் பிரசவம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்:கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணுக்கு, டாக்டர்களும், நர்ஸுகளும் இல்லாததால், பிளாட்பாரத்திலேயேபிரசவம் நடந்து குழந்தை பிறந்தது.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள சோழவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பிரேமா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோவில் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்குடாக்டரோ, நர்ஸோ யாரும் இல்லை.

மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். பேசாமல் கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.இதையடுத்து பிரேமாவை கடலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆட்டோவை எடுத்தனர்.

அப்போது பிரேமாவுக்கு வலி தாங்க முடியவில்லை. அவர் அழ ஆரம்பிக்கவே, ஆட்டோவை நிறுத்தினர். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்றநிலை இருந்தது. இதையடுத்து மருத்துவமனை எதிரில் உள்ள சாலையோரத்தில், துணிகளைக் கொண்டு தடுப்பு கட்டி பிரசவம் பார்த்தனர்.

உறவினர்களும், சாலையில் சென்ற பெண்களும் உதவ, பிரேமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், லேசாக மனம் இறங்கி, விடு.றையில் சென்றிருந்த விஜயலட்சுமி என்ற நர்ஸுக்குத் தகவல் கொடுத்தனர். அவரும்உடனடியாக விரைந்து வந்தார். பிரேமாவையும், குழந்தையையும் மருத்துவனைக்குள் அழைத்துச் சென்று தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.

இந்த மருத்துவமனைக்கு 2 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளா காலியாக உள்ளதாம். நேற்று பணிக்கு வர வேண்டியநர்ஸ் வரவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் நடந்ததைக் கூறி விடுமுறையில் சென்ற நர்ஸ் விஜயலட்சுமிக்குப் போன் செய்தததால் அவர் விரைந்து வந்தார்.

அரசு மருத்துவமனை அருமையாக இருந்தும், அதற்கு எதிரில் சாலையில் வைத்து பிரசவம் பார்த்த கதை நெல்லிக்குப்பத்தை சலசலப்பில் ஆழ்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+