இலங்கை கடற்படை சுட்டு நாகை மீனவர் பலி!
நாகப்பட்டனம்:புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர்பலியானார். 5 மீனவர்கள் காயமடைந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் அருணாச்சலம் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் கலியபெருமாள், அஜீஸ் குமார், செல்வமணி,ராமலிங்கம், ரமணன், காரைக்காலைச் சேர்ந்த அன்பழகன் ஆகிய 6 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக சுட ஆரம்பித்தனர். பயந்து போனமீனவர்கள் கைகளை மேலே தூக்கியபடி கதறினர். இதில் கலியபெருமாள் மார்பில் குண்டு பாய்ந்து படகில் சுருண்டு விழுந்தார்.
அஜீஸ்குமாரின் காலில் குண்டு துளைத்துக் கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை மீனவர்கள் அனைவரும் கரைக்குத்திரும்பினர். மீனவர்கள் கரைக்குத் திரும்புவது குறித்து மீனவர்களிடையே தகவல் ஏற்கனவே பரவி விட்டது.
இதனால் கரையில் பெரும் கூட்டமாக மீனவர்கள் திரண்டிருந்தனர். கலியபெருமாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற மீனவர் குண்டுக் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications