புலிகள் ஊடுருவல்?: மதுரை அகதிகள் முகாம்களில் அதிரடி சோதனை
மதுரை:விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்டத்தில் உள்ளநான்கு அகதிகள் முகாம்களிலும் கியூ பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் சமீபத்தில் விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவைபறிமுதல் செய்யப்பட்டன. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் சிலர்தான்காரணம் என கியூ பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர். அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள்ஊடுறுவி வருவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந் நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம்என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து திருவாதவூர், ஆனையூர், குடிசேரி, உச்சப்பட்டி ஆகிய இடங்களில் உள்ளஅகதிகள் முகாம்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
முகாம்களில் தங்கியுள்ள 3,000க்கும் மேற்பட்ட அகதிகளிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.புதிதாக சேர்ந்துள்ள அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதுதவிர மதுரையில் உள்ள சிலரின் வீடுகளும் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications