தங்கையின் காதலரை கொண்ற அண்ணன் !
மதுரை:திருமணமான தனது தங்கையைத் தொடர்ந்து காதலித்து வந்த பொறியாளரை விஷ மாத்திரை கொடுத்தும், சரமாரியாக அடித்து உதைத்தும் கொலை செய்தஅண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ராதாகிருஷ்ணன். பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில், திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த நிறுவன அதிபரான ஜெய்சங்கர் என்பவர்மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் ராதாகிருஷ்ணன்.
இந் நிலையில், ராதாகிருஷ்ணனின் தந்தை பாண்டியன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தனது மகனின் சாவு குறித்து சந்தேகம்உள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜெய்சங்கர், அவரது அண்ணன்கணேஷ்குமார் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்துதான் ராதாகிருஷ்ணனைக் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
ஜெய்சங்கரின் தங்கையை ராதாகிருஷ்ணா காதலித்துள்ளார். இதை அறிந்த ஜெய்சங்கர், வேறு ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துள்ளார். ஆனாலும்தனது காதலை மறக்க முடியாமல், காதலியின் பின்னாலேயே சுற்றியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், ராதாகிருஷ்ணனைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி ராதாகிருஷ்ணனை தனதுவீட்டுக்கு அழைத்து வந்த ஜெய்சங்கர், அவருக்கு 20 விஷ மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார்.
மயங்கிய நிலைக்குப் போன ராதாகிருஷ்ணனை, ஜெய்சங்கர், அவரது அண்ணன் கணேஷ்குமார், நண்பர்கள் திணேஷ்குமார், ஸ்ரீதர் ஆகியோர் சேர்ந்து சரமாரியாகதாக்கினர்.
இதில் படுகாயமடைந்த பின்னர் ஜெய்சங்கரே, ராதாகிருஷ்ணனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.ஜெய்சங்கர், கணேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications