சன் டிவி மீது டாடா ஸ்கை நிறுவனம் வழக்கு!
டெல்லி:சன் டிவி நிறுவனம் சிக்னல் வழங்க மறுப்பதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
டாடா ஸ்கை என்பது டாடா நிறுவனமும், ஸ்டார் டிவி நிறுவனமும் இணைந்து நடத்தும் டிடிஎச் (டைரக்ட் டூ ஹோம்) சேவையாகும். டாடா ஸ்கைநிறுவனம் வழங்கும் சானல்களில் சன் டிவி தற்போது இடம் பெறவில்லை.
இந் நிலையில், தங்களது டிடிஎச் சேவைக்கு உரிய சிக்னலை வழங்க சன் டிவிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்டாடா ஸ்கை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், இந்திய தொலைத்தொடர்பு முறைப்படுத்தும் ஆணையத்தின் (ட்ராய்) விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளது சன் டிவி.
ட்ராய் நிறுவனத்தின் விதி 3.2ன் கீழ், டிடிஎச் சேவையை வழங்குவோருக்கு எந்த தொலைக்காட்சி நிறுவனமும் சிக்னல் வழங்க மாட்டோம் எனமறுக்க முடியாது. அப்படிச் செய்தால் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால் சன் டிவி இந்த விதிமுறையை மீறும் வகையில் எங்களுக்கு சிக்னல் வழங்க மறுக்கிறது. மேலும் சிக்னல் வழங்க வேண்டும் என்றால் அதிகஅளவிலான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிர்ப்பந்திக்கிறது.
இப்படி அதிக கட்டணம் கேட்பதும் ட்ராய் விதிமுறையை மீறும் செயலாகும். எங்களது நிறுவனத்திடம் இணைப்பு பெற்ற ஒவ்வொருவாடிக்கையாளருக்கும் தலா ரூ. 85 வீதம் மாதந்தோறும் தங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என சன் டிவி கூறுகிறது.
இதே கட்டணத்தில்தான் ஜீ குழுமத்தின் டிடிஎச் சேவையான டிஷ் டிவியிடமும் சன் டிவி வசூலிக்கிறது. இந்தக் கட்டணம் மிக மிக அதிகமானது.இந்த 85 ரூபாயில், இலவச சானலான சன் டிவிக்கு 25 ரூபாயை வசூலிக்கிறார்கள். இதுவும் நியாயமற்றது, சட்டவிரோதமானது, சொத்துரிமைச்சட்டத்தின் விதிமுறையை மீறும் செயலாகும்.
சன் டிவி எங்களுக்கு சிக்னல் தர வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தொலைத்தொடர்பு குறை தீர்ப்பு நடுவர் மன்றத்தைஅணுகினோம். ஆனால் நடுவர் மன்றம் எங்களது கோ>க்கையை நிராகரித்து விட்டது.
எனவே சன் டிவி நிறுவனம் எங்களுக்கு சிக்னல் வழங்க உத்தரவிட வேண்டும் என டாடா ஸ்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications