தமிழகத்திலும் பாஜக அலை வீசும்-இல.கணேசன்
சென்னை:விலைவாசி உயர்வு காரணமாகவே பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் இல.கணேசன்கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலிலேயே பாஜகவை விட 7 இடங்கள் தான் காங்கிரசுக்கு கூடுதலாகக் கிடைத்தன. ஆனால், அதையே அமோக வெற்றிஎன்று மகிழ்ந்தது காங்கிரஸ்.
அதைத் தொடர்ந்து நடந்த குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களில் பாஜக கூட்டணியே வென்றனது. மும்பை மாநகராட்சித்தேர்தலில் வென்றோம். உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வென்றோம்.
சுனாமி மாதிரி தாக்குதல் நடந்த பின்னரும் சென்னை மாநகராட்சியில் 2 இடங்களை பாஜக கைப்பற்றியது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இப்போது பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்துள்ளோம். உத்தரப் பிரதேச தேர்தலில்வெல்வோம்.
தீவிரவாதத்தை அடக்க மத்திய அரசு தவறிவிட்டது, நாடெங்கிலும் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் இன்னலுக்குஆளாகியுள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியே காங்கிரசுக்கு கடும் தோல்வி கிடைத்துள்ளது.
பாஜகவின் இந்த வெற்றி நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும். அடுத்த தேர்தலில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும். வடக்கிலும் மேற்கிலும்இருந்து கர்நாடகம் வரை வீசியுள்ள பாஜக அலை தமிழகத்திலும் வீசும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications