தமிழக மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல்:பிரதமர் உடனே தலையிட கருணாநிதி கோரிக்கை
சென்னை:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உடனடியாக தலையிட வேண்டும் எனபிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழக மீனவர்களுக்கு சமீப காலமாக ஏற்பட்டுள்ள அசாதாரணமான பிரச்சனைகள் குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.குறிப்பாக கடந்த 10 நாட்களில் நடந்த பிரச்சனைகள் குறித்து தமிழக அரசின் சார்பில் வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 12.02.07 அன்று நாகப்பட்டிணம் மீனவர்கள் 9 பேர் சென்ற படகு மீது இலங்கை கடற்படை சுட்டதில் மீனவர்கள் தப்பிவிட்டாலும் படகுமோசமாக சேதமடைந்துவிட்டது.
16.02.07 அன்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் 2 படகுகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர், வலைகளும் சேதப்பட்டுத்தப்பட்டதோடுமீனவர்களையும் அடித்து உதைத்துள்ளனர். அவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
24.02.07 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோட்டப்பட்டிணம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைராணுவம் சுட்டு அருள்தாஸ் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அன்று மட்டும் 10 படகுகளை சேதப்படுத்திவிட்டனர்.
இந் நிலையில் 26.02.07ம் தேதி மூண்டும் இலங்கை கடற்படை சுட்டதில் கலியபெருமாள் என்ற மீனவர் கொல்லப்பட்டார். அஜீஸ்குமார் என்பவர்படுகாயமடைந்துள்ளார்.
இந்த தொடர் சம்பவங்கள் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தமிழக மீனவர்கள் தங்கள் மீன் பிடி தொழிலை இந்திய கடற் பகுதியில்மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
எனவே இதில் நீங்கள் உடனடியாக இதில் தலையிட்டு இலங்கை அரசை வற்புறுத்தி கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடிதொழிலை நம்பி வாழும் அப்பாவி மீனவர்கள் காக்கப்பட வேண்டும் என தனது கடிதத்தில் கருணாநிதி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications