இப்ப ஆர்.வி இல்ல-ஜெவுக்கு திமுக நினைவூட்டல்
சென்னை: உலகத்தில் உள்ள மற்றவர்கள் எல்லாம் செயலற்று இருக்கிறார்கள், தான் மட்டும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என கிணற்று தவளைப்போல எண்ணிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜெயலலிதா இன்றைய தனது அறிக்கையில் காவல்துறை மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அவர் ஆட்சிக் காலத்தில் காவல்துறைமீது யாராவது குற்றம் சாட்டினால், உடனே போலீஸார் மக்கள் நலனுக்காகப் பாடுபடுகிறார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுவதுஅநியாயம் என்று பலமுறை பதில் சொல்லி பழக்கப்பட்டுவிட்ட ஜெயலலிதா தான் தற்போது நடப்பது திமுகவின் ஆட்சி என்பதால் காவல்துறைஏவல் துறையாக செயல்படுவதாக கூறியிருக்கிறார்.
காவல்துறை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எப்படி செயல்பட்டது என்பதை நாடறியும். நள்ளிரவில் எந்தவிதமான சம்மனும் இல்லாமல் முன்னாள்முதலமைச்சரான கருணாநிதியை அவரது வீட்டிற்குள் அத்துமீறி, கதவை உடைத்துக் கொண்டு, படுக்கையறை வரை வந்து பயங்கரமாகத் தாக்கி,இழுத்துச் சென்றதை இந்த உலகமே அறியும்.
அதே போல திமுகவைச் சேர்ந்தவர்களை எல்லாம் அடியாட்களை வைத்து சென்னை கடற்கரையில் தாக்கி, சிலரைக் கொன்று குவித்ததும், பெண்பத்திரிகையாளர்களை தாக்கி, சிலரை காவல்துறையின் தலைமையகத்திற்குள் இழுத்து சென்று அடைத்து வைத்திருந்ததையும் தமிழ்நாட்டு மக்கள்மறந்து விட்டார்கள் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு, புலிகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் என பத்திபத்தியாக எழுதுவதற்கு ஜெயலலிதாவிற்கு என்ன தகுதி இருக்கிறது என தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்விக்கு அவரின் பதில் என்ன?
அவரது ஆட்சிக் காலத்தில் அம்பத்தூரில் ராக்கெட் லாஞ்சர் தயாரிக்கப்பட்டது திமுக ஆட்சியில் கண்டு பிடிக்கப்பட்டதே. அவைதீவிரவாதிகளுக்காக தயாரிக்கப்பட்டவை தானே, அதை மறந்து விட்டு தற்போது இந்த ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாககூறுவது எப்படி சரியாகும்.
ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ள பலவேறு சம்பவங்கள எல்லாம் அவர் ஆட்சியில் கண்டு பிடிக்கப்படாமல் இருந்து தற்போது திமுகஆட்சியில் போலீஸ்துறை திறமையாகவும், வேகமாகவும் செயல்பட்டதினால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் திமுக ஆட்சியில் அவமானப்படுத்தப்படுவதாகவும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். ஜெயலலிதா ஆண்ட5 ஆண்டு காலத்தில் 5 தலைமைச் செயலாளர்களையும், 4 டிஜிபிக்களையும் மாற்றி அவர்களையெல்லாம் அவமானப்படுத்தியது ஜெயலலிதாதானே?
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகள் திமுக ஆட்சியில் தீர்க்கப்படவில்லை என்றும் கூறுகிறார். 5 ஆண்டு காலம் ஆட்சியில்இருந்த போது இந்தப் பிரச்சனைகளிலே என்ன கிழித்தார்?
தமிழகத்தில் திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியாது என்றும் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். அவர் ஆட்சியில்இருந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க எத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. திமுகவின் இந்த 8 மாதகால ஆட்சியில் எத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது என்ற புள்ளி விவரத்தை நாளைய அவருடைய அறிக்கையில் தெரிவிக்கத்தயாரா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications