கர்நாடகம்: இன்னும் ஓயாத காவிரி போராட்டம்
மைசூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் தொடர்ந்து ஆங்காங்கே சாலை மறியல்களும், தர்ணாக்களும், பேரணிகளும்உண்ணாவிரதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகி 23 நாட்களாகி விட்டது. தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில், காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில்ஆரம்பத்தில் பெரியளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. திரையுலகினரும், வக்கீல்களும் ஊர்வலம் சென்றார்கள். விவசாயிளுக்கு ஆதரவுதெரிவித்து நடிகர் அம்பரீஷ் தனது மத்திய அமைச்சர் பதவி மற்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவர்அனுப்பிய ராஜினாமா கடிதம் முறையாக இல்லை என்று கூறி லோக்சபா சபாநாயகர் நிராகரித்து விட்டார். மறுபடியும் ராஜினாமா கடிதத்தைஅம்பரீஷ் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆங்காங்கே சிறு அளவில் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. 23வது நாளானநேற்று, மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன.
மாண்டியா மாவட்டம் மத்தூர், சிவபுரா, மாண்டியா, பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டனா ஆகிய நகரங்களில் சாலை மறியல்கள் நடந்தன. இதனால்மைசூர்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இருப்பினும் கூட்டம் குறைவாக இருந்ததால், போக்குவரத்தில் பெரும்சிக்கல் ஏதும் ஏற்படவில்லை.
மைசூரில், கல்லூரி மாணவர்கள், ஊர்வலம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பல்வேறு கன்னட அமைப்புகளின் சார்பில் ஊர்வலங்கள் நடந்தன. கொள்ளேகாலில் நடந்த போராட்டத்தில் கன்னடஇயக்குநர் மகேந்திராவும், அவரது மனைவி நடிகை ஸ்ருதியும் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications