4 தேமுதிக கவுன்சிலர்கள் பதவியேற்பு
சென்னை:சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு தேமுதிக கவுன்சிலர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த மறு தேர்தலில் 67 வார்டுகளில் தேமுதிக போட்டியிட்டது. இதில் 5 பேர் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் ஆயினர்.ஆனால் அடுத்த நாளே 27வது வார்டு தேமுதிக கவுன்சிலர் சர்தார், தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் போய் சேர்ந்து விட்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 96 கவுன்சிலர்கள் கடந்த 26ம் தேதி பதவியேற்றனர். தேமுதிகவைச் சேர்ந்த நான்கு பேர் மட்டும்பதவியேற்கவில்லை. அவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சேகர் (3), உஷா (45), சரவணன் (48), பிரபாகரன் (63) ஆகிய நான்கு தேமுதிக கவுன்சிலர்களுக்கும், ஆணையர் ராஜேஷ் லக்கானிபதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நான்கு தேமுதிக கவுன்சிலர்களும் விஜயகாந்த் கல்யாண மண்டபத்திலிருந்து ஆட்டோக்களில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதனால்அந்த ஆட்டோக்கள், கார்கள் சென்ற பாதை முழுவதும் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டது.
சர்தார் ராஜினாமா?
இதற்கிடையே திமுகவில் போய்ச் சேர்ந்து விட்ட 27வது வார்டு கவுன்சிலர் சர்தார் ராஜினாமா செய்துள்ளதாக கூறி தேமுதிக சார்பில் ஒரு கடிதம்மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வட சென்னை தேமுதிக தலைவர் தியாகராஜன் கூறுகையில் தேர்தலுக்கு முன்பு சர்தார் கட்சி மேலிடத்திடம் ஒரு கடிதத்தைக்கொடுத்தார். அதில், தேமுதிக சார்பில் போட்டியிட்டு கட்சியின் உழைப்பாலும், செல்வாக்காலும் வெற்றி பெற்ற பின்னர் கட்சி விரோத செயலில்இறங்க மாட்டேன்.
அப்படி நடந்து கொண்டாலோ, வேறு கட்சிக்கு தாவினாலோ எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். அதற்கான கடிதமாகஇதையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதை சர்தாரின் ராஜினாமா கடிதமாக ஏற்க வேண்டும் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை ஏற்க முடியுமா என்பதுகுறித்து சட்டப் பிரிவின் ஆலோசனைக்கு கடிதத்தை அனுப்பி கேட்பதாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உறுதியளித்தார்.
இந்தக் கடிதம் குறித்து சர்தார் கூறுகையில், விஜயகாந்த் மக்களைக் காப்பார் என்று எண்ணித்தான் இக்கட்சியல் சேர்ந்தேன். விஜயகாந்த்தை நான்குறை கூறவில்லை. ஆனால் அவருக்கு கீழ் இருப்பவர்கள் கட்சியை விற்கப் பார்க்கிறார்கள்.
நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். தொடர்ந்து திமுகவில் செயல்படுவேன் என்றார் சர்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications