இந்தியாவில் ஜேட் கூடி!
டெல்லி:பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பாவுடன் கடுமையாக சண்டை போட்டு பிரபலமான இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடிஇந்தியாவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ழ்ச்சியில், நடிகை ஷில்பா ஷெட்டியுடன் சேர்ந்து கலந்துகொண்டவர் ஜேட் கூடி. ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் அவர் கடுமையாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.
இதன் காரணமாக ஜேட் கூடி பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் தான் பேசியதுதவறு, அதற்காக அசிங்கமாக உணர்கிறேன் என்று புலம்பித் தள்ளிய கூடி, விரைவில் இந்தியாவுக்கு போகவுள்ளேன்என்றார்.
பேச்சோடு நில்லாமல் இந்தியா வர விசாவுக்கும் விண்ணப்பித்தார். உடனடியாக விசாவும் கிடைத்தது. இதையடுத்துநேற்று டெல்லி வந்தார் ஜேட் கூடி.
தொண்டு நிறுவனங்களின் அழைப்பின் பேரில் கூடி இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்தவுடன்மாயாபுரியில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு சென்றார் கூடி. அங்கிருந்த குடிசைவாழ் சிறுவர்களுக்கு கல்வி கற்பித்துதரும் பள்ளிக்கூடத்தை கூடி பார்வையிட்டு நெகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூடி பேசுகையில், ஷில்பாவின் உணர்வுகளை நான் காயப்படுத்தி விட்டேன். இதற்காகஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டேன். இப்போது மீண்டும் ஒருமுறை ஷில்பாவிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
பிக் பிரதர் நிகழ்ச்சி எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாது, இதுபோலமேலும் பல நிகழ்ச்சிகள் மூலம் நான் சம்பாதித்த பணம் அத்தனையுமே பாவப் பணம். இந்தப் பணத்தை நான்குழந்தைகள் நல அறக்கட்டளைகளுக்குக் கொடுக்கப் போகிறேன்.
டெல்லி அனுபவ் அறக்கட்டளைக்கு ரூ. 22.50 லட்சம் பணத்தை வழங்குகிறேன். மற்ற அறக்கட்டளைகளுக்கும் நான்இதுபோல கொடுக்கவுள்ளேன்.
இந்தியா வரும்போது எனது வீட்டுக்கு வர வேண்டும் என ஷில்பா கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு நேரம்இருக்குமா என்று தெரியவில்லை. நிறைய நிகழ்ச்சிகள் உள்ளன. எனவே இந்த விசிட்டில் மும்பை செல்லும் வாய்ப்புஇல்லை. ஆனால் அடுத்த முறை கண்டிப்பாக மும்பை வருவேன், ஷில்பாவை சந்திப்பேன் என்றார் கூடி.
டெல்லியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில்தான் கூடி தங்கியுள்ளார். அங்கு கூடிக்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications