மீனவர் தாக்குதல்: மெத்தன அரசுகள்-ஜெ. கண்டனம்
சென்னை:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல், மத்திய, மாநிலஅரசுகள் மெத்தனம் காட்டி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்தநிகழ்வுகள் அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது.
இப்பிரச்சினை குறஇத்து மத்திய அரசும், மாநில அரசும் எந்தவித கவலையும் இல்லாமல் மெத்தனமாக இருந்து வருவது கண்டனத்துக்குரியது.
தமிழக மீனவர்கள் படும் அவதியைக் கண்டு சோம்பேறித்தனமாக, அசமஞ்சமாக இரு அரசுகளும் இருந்து வருகின்றன.
தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. வாழ்வாதாரத்திற்காக மீனவர்கள் கடலையே நம்பி உள்ளனர். ஆனால்தொடர்ந்து அவர்களை இலங்கை கடற்படை தாக்கி வருவது குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு தவறிவிட்டது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கலியபெருமாள் என்ற மீனவர் இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாகஇறந்துள்ளார். இந்த மாதத்தில் இது 2வது சம்பவம்.
இதில் துரதிர்ஷடவசமான விஷயம் என்னவென்றால், கலியபெருமாளின் இரண்டு மகன்களும் கூட ஏற்கனவே இலங்கை கடற்படையினரால்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுதான். அப்போதும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
கலியபெருமாளின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 25ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications