தேர்தல் தோல்வியால் பாதிப்பில்லை: மன்மோகன்
டெல்லி:பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் மத்திய அரசுக்கு ஆபத்து ஏதும் இல்லை. இது மத்திய கூட்டணி அரசின் மீதானமக்கள் கருத்தும் அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. பஞ்சாபில் சிரோண்மனி அகாலிதளமும், பாஜகவும்இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளன. உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மணிப்பூரில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதை தோல்வி என்று நான் கூற மாட்டேன். மேலும்,சட்டசபைத் தேர்தல் முடிவுகள், மத்திய அரசை எந்தவிதத்திலும் பாதிக்காது.
மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். விலைவாசிப் பிரச்சினையும் கூட தோல்விக்குஒரு காரணமாக இருக்கலாம். தேர்தல் முடிவை மத்திய அரசு மீதான கருத்துக் கணிப்பாக கருத முடியாது.
குவாத்ரோச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. குவாத்ரோச்சி விவகாரத்தில் அரசு எந்த்த தவறையும்செய்யவில்லை.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது வருந்தத்தக்கது, கண்டனத்துக்குரியது. குவாத்ரோச்சிவிவகாரம் தொடர்பாக சிபிஐக்கு அரசிடமிருந்து எந்த நிர்ப்பந்த.ம் கொடுக்கப்படவில்லை. இதில் யாருடைய தலையீடும் இல்லை என்றார்மன்மோகன் சிங்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications