காவிரி: ரஜினி வீட்டு முன்பு போராட்டம்!
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடிகர், நடிகையரை திரட்டி ரஜினிகாந்த் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரி சென்னையில் உள்ளரஜினி வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையைச் சேர்ந்த கம்பன் என்ற வழக்கறிஞர் தலைமையில் 20 பேர் இன்று போயஸ் கார்டன் பகுதிக்கு வந்தனர். ரஜினிகாந்த் வீட்டு முன்புதாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடிகர், நடிகையரை திரட்டி ரஜினி போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரி சாகும் வரைஉண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அனைவரும் அப்படியே சாலையில் அமர்ந்துபோராட்டத்தில் குதித்தனர். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வேண்டும், நடிகர், நடிகையரைத் திரட்டிபோராட்டம் நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு சலசலப்புநிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications